டயகம - அக்கரப்பத்தனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி - 5 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

Published By: Digital Desk 4

27 Oct, 2020 | 02:24 PM
image

அக்கரப்பத்தனை, ஆக்ரோ பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

அவருடன் தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன.

பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரியும் இவர் அண்மையில் வீடு திரும்பியுள்ளார். சில இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

பேலியகொடை கொத்தணி பரவலையடுத்து இவரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெறுவதற்கான நடவடிக்கையை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டிருந்தனர். பரிசோதனை முடிவு இன்று (27) வெளியானது. அதில் வைரஸ் தொற்று உறுதியானது.

இதன்பின்னர் அக்கரப்பத்தனை நகரம் தற்காலிகமாக மூடப்பட்டு தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு தொற்றுநீக்கம் செய்யப்பட்டது. பிரதேச சபைத் தலைவர் கதிர்ச்செல்வனின் ஆலோசனையின் பிரகாரம் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை. லிந்துலை பகுதியிலும் பலரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று பெறப்பட்டன.

கொழும்பில் இருந்து வருபவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தகவல்களை வழங்கவேண்டும் எனவும், வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பிலும் விழிப்பாகவே இருக்கவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும் மக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02