மீன் வர்த்தகத்துக்கு சவாலான கொரோனா 

Published By: Digital Desk 3

27 Oct, 2020 | 10:39 AM
image

நாட்டில்  கொரோனா தொற்று பெரும் ஆபத்தான நிலையில் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மினுவாங்கொடை  ஆடை தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை ஆகிய இடங்களில் பரவிய தொற்று கொத்தணியாக பரவி வருகிறது.

இதனிடையே, தொற்றுநோய்யாளர்களில் முதல் பரிசோதனையில் சகலருக்கும் வைரஸ்  இருப்பது கண்டறியப்படுவதில்லை எனவும் முதல் சோதனையில் அவை தென்படுவதில்லை எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

இதனிடையே மிகத் துரிதமாக போக்குவரத்தை கட்டுப்படுத்தாவிட்டால் வயோதிபர்கள் மற்றும் நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படும் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர்  சுதத் சமரவீர எச்சரித்துள்ளார்.

இவற்றுக்கு மத்தியில் நாட்டில் பாரிய பொருளாதார பின்னடைவு மற்றும் வறுமைநிலை தலைதூக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன.

நாட்டில் 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடைகள், வர்த்தக நிலையங்கள் என்பன செயலிழந்துள்ளன. 

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இறைச்சிக் கடையில் உருவாகி உலகை பேராபத்துக்குகொண்டு சென்றது. இங்கு மீன் சந்தையில்  தொற்று பரவி நாட்டை அச்சுறுத்தி வருகின்றது.

இவற்றுக்கு மத்தியில் மீன்பிடித்தொழில் சடுதியாக பாரிய சவாலை எதிர்நோக்கி உள்ளது. பேலியகொடை மீன் விற்பனை நிலையம் மூடப்பட்டதை அடுத்து மீன் விற்பனை பெருமளவு ஸ்தம்பித்துள்ளது.

மக்கள் கடல் உணவை தவிர்த்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. நாட்டின் நாலா பக்கமிருந்தும் மீன்வகைகள் பேலியகொடை சந்தைக்கு வருவது வழக்கம். குறித்த சந்தையில் மீன் விற்பனை தடைபடுமானால் அதை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கடற் தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரும்.

நாட்டின் பிரதான ஜீவனோபாய தொழிலாக விளங்குவதில் முக்கியமானது மீன்பிடி தொழில். அது பாதிக்கப்படுமானால் நாட்டில் நாலாபுறமும் வாழும் மீன்பிடித்  தொழிலாளர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள். நாடளாவிய ரீதியில் 20 மீன்பிடித் துறைமுகங்கள் காணப்படுகின்றன.

தொற்று காரணமாக பேருவளை , காலி ஆகிய மீன்பிடி துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் பேருவளையில் மீன்பிடி துறைமுகத்தில் 32 களஞ்சிய பெட்டி களிலும், காலி துறைமுகத்தில் 21 களஞ்சிய பெட்டிகளிலுமாக சுமார் 30,000 கிலோ கிராம் மீன் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றை பாதுகாப்பான முறையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் மீன்பிடி தொழிலை தொடர  சுகாதார வழிமுறைகளை செயல்படுத்துமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்குவதும் எவ்வாறு அவற்றை சுத்தமாக கையாள்வது என்பது தொடர்பிலும் மக்களுக்கு பாதுகாப்பான வழிமுறைகளை எடுத்துக் கூறுவது அவசியம்.

பொதுவாகவே சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் பெருமளவு காய்கறி வகைகள் வீதியோரங்களில் வைத்தே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலைமையில் விற்பனையாளர்கள் மாத்திரமன்றி உற்பத்தியாளர்கள், நுகர்வோர் என அனைவருமே பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும் இந்நிலை நீடிக்குமானால் நாட்டில் வறுமை தாண்டவமாடும். மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது போகும் எனவே நிலைமையை உணர்ந்து சகலரும் ஒன்றுபட்டு கொரோனாவை முறியடிக்க முன் வர வேண்டும்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13