இன்று இலங்கை வரும் மைக் பொம்பியோ நாளை ஜனாதிபதியை சந்திப்பார்

Published By: Vishnu

27 Oct, 2020 | 07:27 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோ இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க செயலர் மைக்கல் ஆர். பொம்பியோ தலைமையிலான குழுவினர் நாளை புதன்கிழமை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பு உத்தியோகப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை.

இவர்களின் வருகையை முன்னிட்டு அமெரிக்க விமான படைப்பிரிவின் விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ள அந்நாட்டு சிறப்பு படைப்பிரிவினரும் இராஜாங்க தினைக்கள புலனாய்வு அதிகாரிகளும் கொழும்பில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தோ - பசுபிக் பிராந்தியத்திற்கான பொது இலக்குகள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தும் வகையில் தெற்காசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலர் மைக்கல் ஆர். பொம்பியோ மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு செயலர் மார்க்டி. எஸ்பர் ஆகியோரின் கொழும்பு சந்திப்புகள் முக்கியத்துவமிக்கதாகும்.

குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த இரு தரப்பு ஒத்துழைப்புகளில் இலங்கைiயின் பூரணமான பங்களிப்புகள் மற்றும் பங்குடமை என்பன ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அமெரிக்க குழுவினர் கலந்துரையாடவுள்ளனர். அதே போன்று மிலேனியம் சவால் ஒப்பந்தம் , எக்சா மற்றும் சோபா ஆகிய ஒப்பந்தங்களின் அடுத்த கட்டம் குறித்து இதன் போது ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு மிக நீண்ட கால நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகள் சார்ந்த பல முக்கிய விடயங்கள் குறித்து நேருக்கு நேர் பேசப்படுமென கொழும்பு இராஜதந்திரிகள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும் அமெரிக்க தேர்தல் நடைப்பெற இன்னும் ஒரு வாரத்திற்கு குறுகிய நாட்கள் உள்ள நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலர் மைக்கல் ஆர். பொம்பியோ   தெற்காசியாவிற்கான விஜயத்தை முன்னெடுத்துள்ளார். 

அது மாத்திரமன்றி உலகின் அனைத்து பாகங்களுக்குமான விஜயத்தில் ஆர்வத்தை கொண்டிருந்த இராஜாங்க செயலர் பொம்பியோ நீண்டதொரு அரசியல் பயணத்திற்கான  தனது சாயலை வெளிப்படுத்துவதாகவே இவ் விஜயங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58