உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4.33 கோடியாக அதிகரிப்பு

Published By: Digital Desk 3

26 Oct, 2020 | 01:49 PM
image

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 33  இலட்சத்து 28 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா உச்சம் தொட்டுக் குறைந்தது. ஆனால் தற்போது இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளது.

தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 இலட்சத்து 59 ஆயிரத்து 009 ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,19,00,636 ஆக உள்ளது. 

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 77 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலக அளவில் கொரோனா தொற்றுக்கு 10,268,389 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்கா,இந்தியா,பிரேசில்,ரஷ்யா,பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா 8,889,183 பாதிப்பு 230,510 இறப்பு 

இந்தியா 7,909,959 பாதிப்பு 119,030 இறப்பு

பிரேசில் 5,394,128 பாதிப்பு 157,163 இறப்பு

ரஷ்யா 1,513,877 பாதிப்பு 26,050 இறப்பு

பிரான்ஸ் 1,138,507 பாதிப்பு 34,761 இறப்பு

ஸ்பெயின்  1,110,372 பாதிப்பு 34,752 இறப்பு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47