பல நாட்களாக போலி நகைகளை அடகு வைத்து வந்த குழு கைது

Published By: MD.Lucias

22 Jul, 2016 | 03:40 PM
image

பல பிரதேசங்களிலும் வங்கிக் கிளைகளில் போலி தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் மூவர் போலியான தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 

வென்னப்பவ நகரில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு இலட்சத்தி பத்தாயிரம் ரூபாய் பெறுமதியானது எனத் தெரிவித்து போலி தங்க காப்பு ஒன்றை அடகு வைத்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி, பியகம மற்றும் பிங்கிரிய போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 29, 37 மற்றும் 39 வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்கள் பயணித்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களால் அடகு வைப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட போலியாகத் தயாரிக்கப்பட்ட  மூன்று காப்புகள், மோதிரம், கைச்செய்ன் மற்றும் இரண்டு மாலைகளும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 

அத்துடன் களனி மற்றும் ஹெட்டிப்பொல பிரதேச வங்கிகளில் அடகு வைக்கப்பட்டதற்கான அடகு பற்றுச் சீட்டுக்கள் இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சந்தேக நபர்கள் சில காலமாக இவ்வாறான போலி தங்க ஆபரணங்களை களனி, பியகம, நீர்கொழும்பு, மருதானை, பொரளை, மொரட்டுவை போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள வங்கிக் கிளைகளில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளமை தெரியவந்திருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போலி தங்க நகைகளுடன்  மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

வென்னப்பவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் தேசப்பிரிய ஜயதிலகவின் வழிகாட்டலுடன் வென்னப்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் வசந்த குமாரவின் ஆலோசனையில் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் தசநாயக்கா தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31