தென்கொரியாவில் தடுப்பூசி போடப்பட்ட 48 பேர் உயிரிழப்பு ; சிங்கப்பூர் எடுத்த அதிரடித் தீர்மானம்

Published By: Vishnu

26 Oct, 2020 | 12:29 PM
image

தென் கொரியாவில் தடுப்பூசிகளை பெற்ற  சிலர் உயிரிழந்த நிலையில் சிங்கப்பூர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

மேலும் தடுப்பூசிகளின் பயன்பாட்டை நிறுத்துமாறு பகிரங்கமாக அறிவித்த முதல் நாடுகளில் ஒன்றாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது.

பருவ கால காய்ச்சலை தடுப்பதற்காக தென் கொரியாவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பிறகு சனிக்கிழமை நிலவரப்படி குறைந்தது 48 பேர் தென் கொரியாவில் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்த உயிரிழப்பு சம்பவங்களுக்கும் செலுத்தப்பட்ட தடுப்பூசிக்கும் எதுவித நேரடித் தொடர்பும் இல்லை எனக் கூறும் தென்கொரியா, தடுப்பூசி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றும் கூறியது.

இந் நிலையிலேயே 'SKYCellflu Quadrivalent' மற்றும் 'VaxigripTetra' என்ற இரு இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் பயன்பாட்டை முன்னெச்சரிக்கையாக நிறுத்துவதற்கு 

சிங்கப்பூர் சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்கப்பூரில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியுடன் தொடர்புடைய இறப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08