அச்சுறுத்தலாக மாறியுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் : பாதுகாப்பை பலப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை

25 Oct, 2020 | 11:45 PM
image

யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்,

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதியில் இருந்து  பலர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரை 3 பேர் வரையில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம்.

கடந்த முறை இதே போன்று தனிமைப்படுத்தல் முகாமினை அமைப்பதற்கு கிராம மக்களாகிய நாம் எமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தோம். ஆனால் இம்முறை நாடுமுழுவதும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுவரும் காரணத்தினால் மனிதாபிமான அடிப்படையில் எமது எதிர்பினை காட்டாமல் அமைதியாக இருந்தோம். குறித்த பகுதியை சுற்றியுள்ள  அயல் கிராமங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் வராது என நாம் நம்பியிருந்தோம்.

ஆனால் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களால் நம்பிக்கை இழந்துள்ளோம். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாகவும், அயலில் உள்ளவர்களுடன் சட்டவிரோத மதுபான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம்.

இது எமக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது எமது பிரதேசத்துக்கு வருவதற்கும்  ஏனையவர்கள் அச்சப்படுகிறார்கள். நாளடைவில்  ஒதுக்கப்பட்டவர்களாக ஆக்கப்படுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நின்மதியாக வீதிகளில் நடமா முடியலவில்லை பெரும் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளோம்.

மனிதபிமான ரீதியில் நாம் ஒத்துழைப்பு வழங்கியதற்கு  எமக்கு தொற்று நோயையா பரிசாக வழங்கப்போகிறீர்கள். அமைதியாக வாழ்ந்த வாழ்வை  சீரழித்துவிட்டதாகவே எண்ணுகிறோம். எனவே உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அந்தவகையில்

1.தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பினை பேனாதவாறு சுற்றுவட்டாரத்தில்  பாதுகாப்பை பலப்படுத்தல் மற்றும் தொடர்பினை பேணுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல்

2.தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பினை பேணுபவர்கள் உரிய பாதுகாப்புகள் மற்றும்  சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வெளியில் நடமாடுவதை தடுத்தல்

3.மேலும் சுகாதாரத்துறையினர் தொற்று நீக்கல் செயற்பாடுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுற்றுவட்டாரத்தில் முன்னெடுக்க வேண்டும்.

4.மேற்குறித்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பின் இப்பகுதியில்  இருந்து உடனடியாக இந்த தனிமைப்படுத்தல் நிலையத்ததை அகற்ற வேண்டும்  என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46