விளக்கமறியலில் உள்ள முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குமாறு கோரி அவரது சட்டத்தரணியினால் கொழும்பு உயர்நீதிமன்றில் பிணை மனுவொன்று இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றில் அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக சிறைச்சாலையில் உள்ள பசில் இன்று நீதிமன்றில் ஆஜராக முடியாதுள்ளதாக அவரது சட்டதரணி உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.