இந்தியாவின் அயல்நாடுகள் மீது அமெரிக்கா செலுத்தும் கவனத்தை அனுகூலமாகப் பயன்படுத்துவதில் புதுடில்லி அக்கறை

24 Oct, 2020 | 11:40 PM
image
  • சீனாவைக் கட்டுப்படுத்துவதைப் பெருமளவுக்கு நோக்கமாகக் கொண்ட இந்தோ – பசுபிக் கூட்டமைவின் கீழ் பங்களாதேஷ், இலங்கை மற்றும் மாலைதீவை முக்கியமான மூலோபாய பங்காளிகளாக்கும் எதிர்பார்ப்பில் அமெரிக்கா.

-நயனிமா பாசு

பெய்ஜிங்குடன் பதற்றநிலை அதிகரித்து வருவதற்கு மத்தியில் இந்தியா அதன் அயல்நாடுகள் மீது பெருமளவுக்கு இப்போது கவனத்தைக் குவிக்கும் வாஷிங்டனின் நிலைப்பாடுகளை தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்துவதில் அக்கறை காட்டுகிறது.

வெளியுறவுக் கொள்கையில் பெரியதொரு மாற்றமாக, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இப்போது பங்களாதேஷ், இலங்கை மற்றம் மாலைதீவு போன்ற நாடுகளை வாணிப நோக்கங்களுக்காக மாத்திரமல்ல, சீனாவை கட்டுப்படுத்துவதைப் பெருமளவுக்கு நோக்கமாகக் கொண்ட இந்தோ – பசுபிக் கூட்டமைவின் கீழ் முக்கியமான மூலோபாய பங்காளிகளாக மாற்றுவதற்கு எதிர்பார்த்து நிற்கிறது. இந்தியாவின் அயல் நாடுகளில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்குமுகமாக அமெரிக்கா இப்போது அந்த நாடுகள் மீது பெரும் கவனத்தைச் செலுத்துகிறது.  அமெரிக்கா செலுத்துகின்ற இந்த கவனம் இந்தியாவைப் பொறுத்தவரை அதன் ‘அயலகத்துக்கு முதலிடம்’ என்ற கொள்கையின் கீழ் தனது நிலையை வலுப்படுத்துவதற்கு உதவும்.

பொம்பியோவின் இந்திய, இலங்கை விஜயங்கள்

சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கைக் குறைத்து இந்தோ – பசுபிக்  கூட்டமைவை விரிவுபடுத்தும் ஒரு முயற்சியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ அக்டோபர் 27 ஆம் திகதி இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்வார். அவர் கொழும்பில் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷவுடனும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 48 கோடி அமெரிக்க டொலர்கள் நன்கொடையையும் வழங்குவாரென்றும் கூறப்படுகிறது.

இலங்கை விஜயத்திற்கு முன்னதாக பொம்பியோ இந்தியாவுக்கு செல்கிறார். அங்கு அவர் இரு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்களும் பாதுகாப்பு அமைச்சர்களும் கலந்து கொள்கின்ற அமைச்சர்கள் மட்ட மகாநாடொன்றில் கலந்து கொள்வார். அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் பொம்பியோவுடன் கூட வருகிறார். சீனாவின் மத்திய வெளிவிவகார ஆணைக்குழு அலுவலகத்தின் பணிப்பாளரும் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவருமான யாங் யீச்சி தலைமையிலான உயர்மட்ட சீனத் தூதுக்குழுவொன்று கொழும்பு வந்து திரும்பிய கையோடு அமெரிக்க நிர்வாகத்தின் முக்கிய அமைச்சரொருவரின் இலங்கை விஜயம் இடம்பெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது. சீனத் தூதுக்குழுவின் விஜயத்தின் போது சீனாவுடனான நட்புறவை மேலும் ஆழமாக்குவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதிபூண்டார்.

பொம்பியோ மாலைதீவுக்கும் விஜயம் செய்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சிற்கும் இடையில் ஒரு உடன்படிக்கை செப்டெம்பர் 10 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்த நிலையில், அவர் மாலைதீவு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இந்த உடன்படிக்கையை இந்தியா வரவேற்றது.

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் சிங்ரில்லா நவம்பர் 10 ஆம் திகதி மாலைதீவுக்கு விஜயம் செய்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. சீனா தொடர்ந்தும் அடாவடித்தனமான ஊடுருவல்களை செய்து கொண்டிருக்கும் நிலையில், அயலகத்துக்கு முதலிடம் என்ற கொள்கையை உத்வேகப்படுத்துவதற்கான இந்தியாவின் புதிய முயற்சியின் ஒரு அங்கமாக பங்களாதேஷிற்கும் மியன்மாருக்கும் சிங்ரில்லா மேற்கொண்ட விஜயங்களுக்குப் பின்னரே அவரின் மாலைதீவு விஜயம் இடம்பெறப்போகிறது.

“இந்தியாவின் அயல்நாடுகளில் அமெரிக்கா இப்போது கூடுதல் கவனத்தை செலுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘குவாட்’ ( ஙரயனசடையவநசயட ளுநஉரசவைல னுயைடழபரந ) மற்றும் பரந்தளவிலான இந்தோ – பசுபிக் கூட்டமைவு ஆகியவற்றின் கீழ் புதிய அணுகுமுறை மிகுந்த அக்கறையுடன் வகுக்கப்பட்டு வருகின்ற வேளையில், இந்தியாவின் அயலகத்தின் மீது அமெரிக்கா செலுத்துகின்ற இந்த கூடுதல் கவனம் ஒரு சாதகமான நிகழ்வுப் போக்காகும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பலத்தைப் பொறுத்தவரை அசமத்துவம் இருப்பது அமெரிக்காவுக்குத் தெரியும் என்ற நிலையில், இந்தியா அதன் நிலையை வலுப்படுத்திக் கொள்ளவும் நம்பிக்கையை வளர்க்கவும் புதிய நிலைவரங்கள் உதவும்” என்று அரசியல் ஆய்வாளர் ராஜிவ் பாதியா கூறினார்.

அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு

அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச்சர் ஸ்டீபன் ஈ பீகன் அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது சீனா அலட்சியப்படுத்த முடியாத பெரியதொரு பிரச்சினைiயாக இருக்கின்ற நிலையில், வாஷிங்டனுக்கும் புதடில்லிக்கும் இடையில் அடிப்படை இணைப்பொன்று இருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தார். தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு பீகன் நேரடியாக டாக்காவுக்கே சென்றார். டாக்காவில் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ. கே. அப்துல் மோமலுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பீகன் “சட்ட முறைமைக்கு கட்டுப்படுகிற  ஒரு சுதந்திரமானதும் திறந்ததுமான இந்தோ – பசுபிக் கூட்டமைவை மேம்படுத்துவது தொடர்பில் பங்களாதேஷ{டனான உறவுகளின் வளர்ச்சியில்அமெரிக்கா மிகுந்த பற்றுறுதி கொண்டிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் எமது பணிகளின் மையமாக பங்களாதேஷ் விளங்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

“வாஷிங்டனில் எந்தக் கட்சியின் நிர்வாகம் பதவிக்கு வந்தாலும் மூலோபாய விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெருமளவு ஒப்புதல் இருக்கிறது. குடியரசுக் கட்சிக்காரர்கள் சீனா மீது பெருமளவுக்குக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்ற போதிலும், தற்போது ஜனநாயகக் கட்சியினரும் சீனாவின் முன்னெற்றம் தடுக்கப்பட வேண்டியதே என்ற யதார்த்த நிலையை ஒத்துக்கொள்கிறார்கள்.” என்று டில்லியிலுள்ள ஒப்சேர்வர் றிசேர்ச் பவுன்டேசனின் முக்கியமான ஆய்வாளரான ராஜேஸ்வரி பிள்ளை ராஜகோபாலன் கூறினார்.

ஆனால், பைடன் நிர்வாகம் அதிகாரத்திற்கு வருமானால், இந்தியாவினதும் அமெரிக்காவினதும் தொழிற்துறைகளின் அணிசேருகை இந்தியாவின் அயல்நாடுகளில் இடம்பெறுமா இல்லையா என்பது தொடர்ந்தும் சந்தேகமாக இருக்கிறது என்றும் ராஜேஸ்வரி கூறினார்.

கடந்த செப்டெம்பரில் இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் நிகழ்த்திய உரையில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் “ அமெரிக்காவும் இந்தியாவும் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் வலுவான நலன்களைப் பொதுவில் கொண்டுள்ளன. அந்தப் பிராந்தியத்தில் சீனா உட்பட எந்தவொரு நாடும் அதன் அயல் நாடுகளை சர்வதேச சட்டங்களைத் துச்சமென மதித்து அச்சுறுத்த முடியாது” என்று கூறினார்.

 (த பிரின்ற்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13