எனது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்; ரிட் மனு தாக்கல் செய்தார் பொடி லெசி

Published By: Digital Desk 3

24 Oct, 2020 | 02:29 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

தனது பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கோரி, பொடி லெஸி என பரவலாக அறியப்படும் பாதாள உலகத் தலைவராக பொலிஸாரால் அடையாளப்படுத்தப்படும்  ஜனித் மது சங்க ரிட் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

இந்த ரிட் மனுவை நேற்று ஆராய்ந்த  மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா அடங்கிய குழுவினர்,  எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி மன்றில் ஆஜராக பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவிடுமாறு ஜனித் மதுசங்க எனும் பொடி லெஸி மேன் முறையீட்டில் தாக்கல் செய்துள்ள அந்த ரிட் மனு ஊடாக கோரியுள்ளார்.

கைது செய்யப்பட்டிருக்கும் இந்த சூழலில் தனது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என  பூசா சிரைச்சாலை அத்தியட்சர், பூசா சிரையின் பிரதான சிறை அதிகாரி,  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபரிடம் இருந்து  உறுதியொன்றினை பெற்றுத் தர உத்தரவிடுமாறு அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த ரிட் மனுவில் பிரதிவாதிகளாக,  பூசா சிறையில் அத்தியட்சர்,  பூசா சிறையின் பிரதான சிறை அதிகாரி,  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்,  சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம்),  சிறைச்சாலை ஆணையாளர் ( நிர்வாகம் மற்றும் உளவுப் பிரிவு), சிறைச்சாலை பிரதான புலனாய்வு அதிகாரி மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பிரதிவாதிகளை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி மன்றில் ஆஜராக  அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49