அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Published By: Digital Desk 3

24 Oct, 2020 | 10:30 AM
image

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்நாட்டு உள்ளூர் மாநில சுகாதார அதிகாரிகளின் தரவுகளின் படி, நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் 83,010 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதவாகியுள்ளது.

அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் ஜெனரல் ஜெரோம் ஆடம்ஸ் வைத்தியசலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளார், ஆனால் சிறந்த நோயாளி பராமரிப்பு காரணமாக இறப்பு விகிதம் குறைந்து வருகிறது  என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மருந்து உற்பத்தி  ஜாம்பவான்களான அஸ்ட்ராசெனெகா மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவில் தடுப்பூசி பரிசோதனைகளை கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதலுக்குப் பிறகு மீண்டும் தொடங்குகின்றனர்.

வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் "ஆபத்தான கட்டத்தில்" உள்ளன என்றும் உலக சுகாதார ஸ்தானம் எச்சரித்துள்ளது.

"அடுத்த சில மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும், சில நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன" என உலக சுகாதார ஸ்தானம் பணிப்பாளர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தள்ளார்.

கோவிட் டிராக்கிங் திட்டத்தின் படி, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் கிட்டத்தட்ட 87 இலட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஜூலை 17 ஆம் திகதி பதிவான தொற்றாளல்களின் எண்ணிக்கையை விஞ்சியுள்ளது. ஜூலை 17 ஆம் திகதி 76,842 தொற்றாளர்கள் பதிவாகியிருந்தது.

கடந்த வாரத்தில், அமெரிக்காவில் புதிய தொற்றுநோய்களின்  441,541  ஆக அதிகரித்துள்ளது - இது ஜூலை மாத இறுதியில் இருந்து ஏழு நாட்களில் இடம்பெற்ற அதிகரிப்பாகும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆறு நாட்களில் படிப்படியாக அதிகரித்துள்ளது, இதுவரை அமெர்க்காவில் 2 இலட்சத்து 29 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில்,அமெரிக்காவில் அடுத்த ஆண்டு பெப்ரிவரி இறுதிக்குள் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட கூடும்.  ஆனால் ஒவ்வொருவரும் முகக்கவசங்கள் அணிவதன் வழியே 1.3 இலட்சம் உயிர்களை பாதுகாக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52