சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடையை நீக்க வலியுறுத்துங்கள் - சஜித்

23 Oct, 2020 | 08:21 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் போது, எமது இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடையை நீக்கும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, எதிர்க்கட்சி தலைவர் விசேட கூற்றொன்றை எழுப்பிய வேளையில் இந்த விடயங்களை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் வேளையில்  வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் வெளிவிவகார அமைச்சரிடமும், ஜனாதிபதி, பிரதமரிடமும் ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன்.

 எமது நாட்டின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. எனவே பொம்பியோவுடனான பேச்சுவார்த்தைகளின் போது எமது இராணுவத் தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வலியிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த விடயத்தில் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கவோ வேறு வழிகளில் தொடர்பு கொள்ளவோ அவசியம் இல்லை. 

அவர் இலங்கைக்கு வருகின்றார், நேருக்கு நேராக அவரை சந்திக்கப்போகின்றீர்கள். எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற முன்னர் அவரிடம் இருந்து வாக்குறுதி ஒன்றினை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40