12 மணிநேரத்திற்குள் தனிநபரிடம் அனைத்து அதிகாரங்களும் குவிப்பு -  ஹர்ஷ டி சில்வா

Published By: Digital Desk 3

23 Oct, 2020 | 04:45 PM
image

(நா.தனுஜா)

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி 12 மணிநேரத்திற்குள்ளாகவே அரசாங்கம் அனைத்துவிதமான அதிகாரங்களையும் தனிநபர் ஒருவரிடத்தில்  குவிப்பதை முன்னிறுத்திய செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாக பாராளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரின் தலைமையின் கீழேயே நிதி தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்ற யோசனை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி அதற்கான தலைவர் பதவிக்கு எனது பெயரே முன்மொழியப்பட்டிருந்தது. எனினும் இன்று  காலை பாராளுமன்ற நிலையியல் கட்டளையை மாற்றி, இந்த தெரிவுக்குழுவின் தலைமைப்பதவியை தமது வசமாக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சித்தது. எனினும் நாம் வாக்கெடுப்பொன்றை நடத்தி, அதனை எமது வசமாக்கிக்கொண்டோம். இந்நிலையில் ஏற்கனவே நாம் கூறியதைப்போன்று பாராளுமன்றத்தின் அதிகாரங்களை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவருவதற்கு ஆளுந்தரப்பு மேற்கொண்டிருக்கும் முதலாவது முயற்சி இதுவாகும்.

வலுவான அரசாங்கமொன்றை அமைப்பதற்காகவே 20 ஆவது திருத்ததிற்கு ஆதரவளிக்குமாறு கோருகிறோம் என்று ஆளுந்தரப்பு கூறியது. ஆனால் தனியொரு நபரிடத்தில் அனைத்து அதிகாரங்களையும் குவிப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று நாம் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம். அந்தவகையில் பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றிபெற்று 12 மணிநேரத்திற்குள்ளாக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது. இவ்வாறு நாட்டை எந்த பாதையில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் முற்படுகிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

அரசியலமைப்பிற்கான 30 ஆவது திருத்தத்தினால் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். கணக்காய்வு தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களையடுத்து, 20 ஆவது திருத்தத்தில் மேலும் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. எமது தொடர் முயற்சிகளின் ஊடாக கணக்காய்வு தொடர்பில் 20 ஆவது திருத்ததில் உள்ளடக்கப்பட்டிருந்த சரத்தை நீக்கமுடிந்தது. எனவே இனி ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை அரசாங்கம் கொண்டிருக்கும் நிறுவனங்களை கணக்காய்விற்கு உட்படுத்தும் அதிகாரம் கணக்காய்வாளர் நாயகத்திற்கு உள்ளது.

அதேபோன்று இன்று சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் இதுவரையில் பெரிதாக பேசப்படவில்லை. முதலாவதாக கணக்காய்வு தொடர்பான திருத்தம் நீக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை 24 மணிநேரத்திற்குள் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியும் என்ற ஒரு விடயம் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது. அது தவறுதலாக இடம்பெற்றுவிட்டது என்று அரசாங்கம் கூறினாலும், இத்தகைய பெரும் பிழை எவ்வாறு இடம்பெறமுடியும் என்ற சந்தேகம் எமக்கிருக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08