முஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி அரசாங்கத்தால் 20 ஐ நிவைவேற்ற முடியவில்லை - விஜித ஹேரத்

Published By: R. Kalaichelvan

23 Oct, 2020 | 02:26 PM
image

(எம்.மனோசித்ரா)

தனிசிங்கள ஆட்சியமைப்பதாகக் கூறி இனவாத பிரசாரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற அரசாங்கம் தற்போது முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவுடனேயே 20 ஐ நிறைவேற்றிக் கொண்டது.

பணத்திற்காகவும் பதவிக்காகவும் காட்டிக் கொடுக்கும் உறுப்பினர்கள் சஜித் அணியிலேயே உள்ளார்கள் என்பதை நாம் தேர்தலுக்கு முன்னரே மக்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம் என்று மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தற்போதைய அரசாங்கம் பௌத்த மக்கள் மத்தியில் ஏனைய மதங்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி தனி சிங்கள ஆட்சியமைப்பதாக அந்த மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது ஹக்கீம் , ரிஷாத் ஆகியோரின் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடனேயே 20 ஐ நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

உண்மையில் அரசாங்கத்திற்கு 20 ஐ நிறைவேற்றிக் கொள்வதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படவில்லை. பங்காளிக்கட்சிகளுடன் இணைத்து ஆளுந்தரப்பில் 150 உறுப்பினர்கள் உள்ளனர்.

அவற்றில் சபாநாயகரை தவிர்த்தால் 149 உறுப்பினர்கள். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. எனவே அரசாங்கத்திற்கு 148 வாக்குகள் மாத்திரமே காணப்பட்டது. அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்ல.

மூன்றில் இரண்டுக்கு 3 வாக்குகளே தேவைக்கப்பட்ட போதிலும் சஜித் தரப்பில் 8 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்தை சுலபமாக காப்பாற்றிவிட்டனர்.

பதவிக்காகவும் பணத்திற்காகவும் காட்டிக்கொடுக்கும் உறுப்பினர்கள் சஜித் தரப்பிலேயே உள்ளனர் என்பதை நாம் ஆரம்பத்திலேயே மக்களுக்கு தெரிவித்துள்ளோம். எனவே இனியாவது இனவாதத்திற்குள் சிக்கி ஏமாறாமல் சிந்தித்து செயற்படுமாறு நாம் மக்களுக்கு வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55