மஞ்சளுடன் அரிசிமாவை கலந்து விற்பனை : பாவனைக்குதவாத மஞ்சளுடன் மூவர் கைது 

Published By: Digital Desk 4

23 Oct, 2020 | 01:03 PM
image

மஞ்சளுடன் அரிசிமாவை கலந்து விற்பனை செய்து வந்த  ஆலையொன்று முற்றுகையிடப்பட்டு பாவனைக்கு உதவாத 82 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய வியாழக்கிழமை பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. சுற்றிவளைப்பின் போது மஞ்சளுடன் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஒருதொகை அரிசியும் அதனை மாவாக்கப் பயன்படுத்தப்பட்ட அரைக்கும் இயந்திரமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தவுலகல , பூவெலிக்கட - கெலிஓயா வீதியிலேயே இந்த ஆலை அமையப்பெற்றுள்ளது. சுற்றிவளைப்பின் போது குறித்த ஆலையின் உரிமையாளர் மற்றும் புஸ்ஸல்லாவை , வத்துகஹபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த ஒருதொகை மஞ்சள் தம்புள்ளை, கல்முனை, கேகாலை, மாவனெல்ல மற்றும் காத்தான்குடி பகுதிகளிலுள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களுக்கே விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு  பாவனைக்கு உதவாத மஞ்சளை விற்பனை செய்த விற்பனை நிலையங்கள் தொடர்பில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தவுலகல பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சனத் அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். 

நுகர்வோர் அதிகார சபையின் கண்டி மாவட்ட பிரதானி ஏ. எம். பே. சமந்த அத்தபத்து  உள்ளிட்ட குழுவினர் ஆலையிலிருந்த  பாவனைக்கு உதவாத மஞ்சள் மற்றும் அதனுடன் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். 

குறித்த ஆலை அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் குறித்த ஆலையை  மூடி சீல் வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01