சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தும் வகையில் செயற்பட்ட 44 பேர் அதிரடியாக கைது

Published By: Vishnu

23 Oct, 2020 | 12:58 PM
image

அவுஸ்திரேலியாவில் சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தும் பொருட்களை தயாரித்த மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 44 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தளத்தில் பகிரப்பட்ட படங்கள் மற்றும் காணொளி குறித்து ஒரு வருடமாக நீடித்த விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இந்த நடவடிக்கையினால் ஜூன் மாதத்திலிருந்து மொத்தம் 134 சிறுவர்கள் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் பெடரல் பொலிஸார் கூறியுள்ளனர். 

அவுஸ்திரேலியாவின் 7 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களிலிருந்து 19 - 57 வயதுக்குட்பட்ட நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக பொலிஸார் மொத்தம் 350 குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்துள்ளனர். இவை அனைத்தும் சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தும் நடவடிக்கையை இலக்காக கொண்டு செயற்பட்டமையினை கருத்திற் கொண்டு சுமத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஏழு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் முழுவதும் நூற்றுக் கணக்கான பொலிஸ் மற்றும் நிபுணர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் கட்டுமானம், போக்குவரத்து, சட்ட அமுலாக்கம் மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட தொழில்களில் பணியாற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08