இளம் சமாதான ஊடகவியலாளர்களின் மீளிணைவு 2019/20

Published By: Digital Desk 4

23 Oct, 2020 | 12:24 PM
image

இளம் சமாதான ஊடகவியலாளர்களின் மீளிணைவானது சமீபத்தில் நடைபெற்ற மீடியாகோர்ப்ஸ் புலமைப்பரிசில் திட்டத்தில் பங்குபற்றிய நான்கு குழுக்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. 

குறித்த பயிற்சிகள் முடிவுற்று ஒரு வருடத்தின் பின் சுமார் 90 இளம் ஊடகவியலாளர்களுடன் (47 ஆண்கள், 43 பெண்கள்: சிங்களம் 44, தமிழ் 34, முஸ்லீம் 12) கொழும்பு Global Tower எனும் ஹோட்டலில் கடந்த ஒக்டோபர் மாதம் 2-4 திகதிகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மீளிணைவானது IREX (சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனை மையம்) நிறுவன உயர் தலைமைப்பீட உறுப்பினர் திருமதி Jean Mackenzie மற்றும் SDJF(இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம்) நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் முகமட் அசாட் ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆரம்பமாகியது. 

திருமதி Jean Mackenzie குறித்த புலமைப்பரிசில் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்த அனைத்து இளம் ஊடகவியலாளர்களையும் தனது உரையின் போது வாழ்த்து தெரிவித்தார். 

மேலும் அவர் குறிப்பிடுகையில், நீங்கள் தொடங்கியவை இன்றுடன் முடிவடையாது, சமூகத்தை ஒருநிலைப்படுத்தி முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்லும் கதைகளை மேலும் உருவாக்க வேண்டும் மற்றும் சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாவும் இலங்கையின் சமாதானம் மற்றும் சகவாழ்விற்கு கூடிய பங்களிப்பு செய்யும் வண்ணமும் உங்களது ஊடக செயற்பாடுகள்  அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

மேலும் திரு. முகமட் அசாட் தனது உரையில், MediaCorps Watch எனும் ஓர் புதிய தளத்தினை நாம் உருவாக்கியுள்ளோம். இதனுடாக சமூகத்துக்கு பயனளிக்கக்கூடிய கதைகளை உங்களால் பதிவிட முடியுமெனவும் அதனுடாக நீடித்த சமூக தாக்கத்தினை உருவாக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். அதேபோல் MediaCorps Watch நிகழ்ச்சித்திட்ட அதிகாரியான செல்வி நிராஸா பியவதனி குறித்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு தொடர்ந்தும் மோஜோ கதைகளை அனுப்பிவைத்து வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல கைகோருமாறு குறித்த இளம் ஊடகவியலாளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.   

குறித்த நிகழ்வின் இரண்டாம் நாள், MediaCorps புலமைப்பரிசில் திட்டத்தில் பங்குபற்றிய நான்கு குழுக்களையும் ஒன்றிணைத்து அவர்களுக்கிடையே ஓர் வலைப்பின்னலை ஏற்படுத்தும் நோக்குடன் ஓர் சுவாரஷ்யமான செயற்பாடும் நடந்தேறியாமை விசேட அம்சமாகும்.   

தொடர்ந்து நடந்த அமர்வுகளின் போது, MediaCorps புலமைப்பரிசில் திட்டத்தினுடாக அவர்களிடம்; ஏற்பட்ட சுய மற்றும் தொழில்வாண்மையான மாற்றங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன மேலும் சுய மதிப்பீடு செய்யும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. 

சுய மதிப்பீட்டினை மேற்கொள்ள ஓர் தனித்துவமான கேள்விகளை உள்ளடக்கிய வினாப்பத்திரம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  குறித்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அவர்களிடம் ஏற்பட்ட விசேடமான மாற்றத்தினை MSCAT (Most Significant Change Analysis Tool) எனும் பகுப்பாய்வு வினாப்பத்திரத்தினுடாகவும் அவர்களின் அனுபவ பகிர்வினுடாகவும் அவர்களின் மாற்றங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. 

அவர்களிடம் ஏற்பட்ட விசேட மாற்றங்களாக, வியஜம் செய்த சமூகத்தில் இருந்த வறிய சமூக அங்கத்தவர்களுக்கு உதவுவதற்காக தொண்டு திட்டங்களை எவ்வாறு நடாத்தினர், தாம் கற்ற மோஜோ கற்கையினை எவ்வாறு தமது சமூகத்திற்கும் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் பயிற்றுவித்தனர், 

சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி செய்திகள் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் அல்லது முறைகேடுகளை எதிர்கொள்ள சமூக ஊடக பயனாளிகளைக் கொண்ட படையணிகளை உருவாக்குதல் போன்றன குறித்த இளம் ஊடகவியலாளர்களிடம் ஏற்பட்ட விசேட மாற்றங்களில் ஒரு சிலவாகும்.            

அடுத்த நாள் மோஜோ கதை வழிகாட்டிகளின் உதவியுடன் அவர்களுக்கு ஏற்பட்ட விசேட மாற்றத்தினையும் அவர்களின் அனுபவத்தினையும் மற்றும் இவற்றினுடாக சமூகத்தில் ஏற்பட்ட தாக்கத்தினையும் பிரதிபலிக்கும் வகையில் வெற்றிக்கதைகளாக ஒவ்வொருவரும் தனிப்பட்ட மோஜோ கதைகளை உருவாக்கினர்.    

மீளிணைவு நிகழ்வின் இறுதியில் MediaCorps புலமைப்பரிசில் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்த பரிசில்தாரிகளுக்கு பெறுமதிமிக்க சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

MediaCorps புலமைப்பரிசில் திட்டமானது USAID நிறுவனத்தின் நிதி உதவியுடன் நடைபெறும் ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுப்படுத்தல் (MEND) எனும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனை மையத்துடன் (IREX) இணைந்து இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJF) வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இது குறித்த மேலதிக தகவல்களுக்கு எமது இணைய தளத்தை பார்வையிடலாம்  www.Ldjf.org எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08