எதிர்வரும் காலங்களில் சீனாவுடனான வர்த்தக உறவினை விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி காரியாலயம் தெரிவித்துள்ளது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுவரும் இலங்கை அதனை விரிவுபடுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் சீனாவுடன் வர்த்தக உறவினை விரிவாக்க எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி காரியாலயம் தெரிவித்துள்ளது.

வெறியுறவு குழுவினை வரவேற்கும் நிகழ்வொன்றில் ஜனாதிபதி கலந்துக்கொண்ட போதே மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உலக நாடுகள் அனைத்துடனும் நட்புறவை பேணுவதே தனது கொள்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போர்த்துக்கல், மெக்ஸிகோ, அயர்லாந்து மற்றும் கிரிஸ் நாடுகளுக்கான புதிய தூதுவர்களின் சான்றுகளை பெற்றுக்கொள்ளும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.