இலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன

22 Oct, 2020 | 11:42 PM
image

எந்தவொரு நாட்டிடமிருந்தும் இலங்கை பெருமளவு முதலீடுகளை எதிர்பார்க்கிறது. ஆனால், முதலீடுகள் . இலங்கைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்ற போது சீனா மாத்திரமே உதவுகிறது என்று கூறியிருக்கும் சீனாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் கலாநிதி பாலித்த கோஹோன, சீனக் கம்பனிகளுக்கான ஒரு நட்பு நாடாகவே இலங்கை நோக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சீனா கடன் பொறிகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுவது வெறும் பிரசாரமே தவிர வேறொன்றுமில்லை. இலங்கையின் கடன்களில் 90 சதவீதமானவை மேற்கு நாடுகளிடமிருந்தும் சர்வதேச பல்தரப்பு நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெற்றவையேயாகும் என்றும் கலாநிதி கோஹோன குறிப்பிட்டார்.

சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவாவிற்கு  கொழும்பில் புதன்கிழமை வழங்கிய நேர்காணலொன்றில், அடுத்த மாதம் பெய்ஜிங்கில் ஆரம்பமாகவிருக்கும் சீனாவின் வருடாந்த சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியை  (China International Import Expo) ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்காக இலங்கை ஏற்றுமதியாளர்கள் அனுகூலமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

“ அந்தக் கண்காட்சியை சீனச் சந்தையில் பிரவேசிப்பதற்கான ஒரு அருமையான சந்தர்ப்பமாக இலங்கையின் தேயிலைக் கம்பனிகள், இறப்பர் உற்பத்திக் கம்பனிகள், வாசனைச் சரக்குகள் கம்பனிகள், தெங்கு உற்பத்திக் கம்பனிகள், இரத்தினக்கல், ஆபரண உற்பத்தியாளர்கள், இலங்கையின் உல்லாசப்பிரயாணத்துறை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ஏனைய சேவைகள் வழங்குனர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர பிரதிநிதியாகவும் பணியாற்றிய கோஹோன தெரிவித்தார்.

இலங்கையின் தேயிலையை ஒரு உதாரணமாகக் கூறிய அவர், அது இளம் சீனப் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது என்று சொன்னார். உலகில் விரைவாக வளர்ந்து வரும் தேயிலைக்கான சந்தைகளில் சீனாவும் ஒன்று என்று கூறிய அவர், 2010 ஆம் ஆண்டில் இலங்கை சீனாவுக்கு  சுமார் 10 இலட்சம் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்தது. கடந்த வருடம் 1 கோடியே 10 இலட்சம் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

உலகில் மிகப்பெரிய சுற்றுலாத்துறை வள மூலமாக சீனாவும் இரண்டாவது பெரிய வள மூலமாக இலங்கையும் விளங்குவதாகச் சுட்டிக்காட்டிய கோஹோன, அண்மைய எதிர்காலத்தில் சீனாவிலிருந்து கூடுதல் எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகளை இலங்கை கவரும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

“ சீனச் சுற்றுலாச் சந்தைக்கு வனப்பு மிகு கடற்கரைகள், வரலாற்று பெருமைமிக்க தலங்கள், தேயிலைத் தோட்டங்கள், பசுந்தரைகள் மற்றும் நீலவானம் மாத்திரம் போதாது. எமது நாட்டில் காலை வேளைகளில் கடலில் திமிங்கலங்கள் துள்ளி விளையாடுவதையும் மாலை வேளையில் யானைக் கூட்டங்களையும் பார்க்கக் கூடியதாகவிருக்கிறது.” என்றும் அவர் சின்ஹ{வாவிற்கு கூறினார்.

‘மண்டலமும் பாதையும்’ (Bette and Road Initative) செயற்திட்டத்தின் கட்டமைப்புக்குள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான முன்னோடி ஒத்துழைப்புத் திட்டங்களான கொழும்புத் துறைமுக நகரத்திலும், அம்பாந்தோட்டை துறைமுகத்திலும் விசேட பொருளாதார வலயங்களுக்காக நம்பகமான சட்டக் கட்டமைப்பொன்றை இலங்கை அரசாங்கம் வகுக்கும். இந்த விசேட பொருளாதார வலயங்கள் உலகம் பூராவுமிருந்து முதலீட்டாளர்களைக் கவருபவையாக அமையும். 

எமக்குத் தேவைப்படுவது முதலீடுகள். கூடுதல் முதலீடுகளை நாம் நாடி நிற்கின்றோம். நாம் செல்வத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது. நாம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டிய தேவையுமிருக்கிறது. இவையெல்லாம் உட்பட எமது மக்களுக்காக சுபீட்சத்தைத் தோற்றுவிக்க வேண்டியிருக்கிறது, என்றும் கோஹோன கூறினார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் கடன் பொறிகளை ஏற்படுத்தி வருவதாக சீனாவுக்கு எதிராக மேற்கு நாடுகள் சிலவற்றினால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டை நிராகரித்த அவர், இலங்கையின் கடன்களில் 90 சதவீதமானவை உண்மையில் மேற்கு நாடுகளிடமிருந்தும் சர்வதேச பல்தரப்பு நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெற்றவையே ஆகும் என்று சுட்டிக்காட்டினாhர்.

இலங்கையில் எந்தவொரு நாடும் முதலீடுகளை செய்யலாம். எந்தவொரு நாட்டிடமிருந்தும் நாம் பெருமளவு முதலீடுகளை எதிர்பார்க்கின்றோம். ஆனால், எமக்கு மிக அவசியமாகத் தேவைப்படும் போது முதலீடுகளை செய்து எமக்கு உதவுவதற்கு சீனா மாத்திரமே இருக்கிறது. சீனக் கம்பனிகளுக்கான ஒரு நட்பு நாடாக இலங்கை நோக்கப்பட வேண்டும் என்றும் கோஹோன கூறினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22