சிறையை நிரப்புவதில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களா?

Published By: Robert

22 Jul, 2016 | 09:35 AM
image

சிறைச்­சா­லையை நிரப்பும் செயற்­பாட்டில் மாண­வர்­களை ஆசி­ரி­யர்கள் மிஞ்­சு­கின்­றார்­களோ என கேள்வி எழுப்பி கவலை வெளி­யிட்­டுள்ள யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன், ஆசி­ரி­யரோ மாண­வரோ எவரும் சட்­டத்தை கையில் எடுத்துச் செயற்­படக் கூடாது என அறி­வு­றுத்­தி­யுள்ளார். ஆசி­ரி­யர்கள் மாண­வர்கள் மீது குற்றச் செயல்கள் புரி­வ­தாக தொடர்ச்­சி­யாகக் குற்­றச்­சாட்­டுக்கள் வந்த வண்ணம் உள்­ளன. இது உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும்.

பாட­சா­லைகள், பாட­சாலை வளா­கங்கள், கல்­லூரி வளா­கங்கள் என்­பன குற்றச் செயல் புரி­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்ட பிர­தே­ச­மல்ல. சட்­டத்தைக் கையில் எடுத்துச் செயற்­ப­டு­ப­வர்கள் சட்­ட­வாட்­சிக்கு எதி­ரா­ன­வர்­க­ளா­கவே கரு­தப்­ப­டு­வார்கள். மாண­வர்கள் தொடர்­பி­லான குற்றச் செயல்­க­ளுக்கு மேல் நீதி­மன்றம் கடு­மை­யான போக்­கையே எடுக்கும் என்று போதை வஸ்து தொடர்­பான வழக்கின் பிணை மனு மீதான விசா­ரணை ஒன்றின் போது திங்­கட்­கி­ழமை அவர் தெரி­வித்­துள்ளார். 

அவர் அப்­போது மேலும் தெரி­வித்­த­தா­வது: யாழ். குடா­நாட்டில் போதைவஸ்து மற்றும் வாள்­வெட்டு குற்­றங்கள், கோஷ்டி மோதல்கள், தெருச் சண்­டித்­தனம், கொள்ளை, குழு மோதல்கள் என பல­வித குற்­றச்­சாட்­டுக்­களில் பாட­சாலை மாண­வர்கள் கைது செய்­யப்­பட்­டார்கள். இந்தக் குற்றச் செயல்­க­ளுக்கு எதி­ராக இறுக்­க­மான சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தனால், தற்­ச­மயம் மாண­வர்கள் குற்­றங்கள் புரி­வது குறை­வ­டைந்து காணப்­ப­டு­கின்­றது. ஆனால் ஆசி­ரி­யர்கள் மாண­வர்கள் மீது குற்றச் செயல்கள் புரி­வ­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. இது குறித்து தொடர்ச்­சி­யாகக் முறைப்­பா­டுகள் வந்த வண்ணம் உள்­ளன. ஆசி­ரி­யர்கள் மாண­வர்­களை அடிக்­கின்­றார்கள். மாண­வர்­களைத் தாக்­கு­கின்­றார்கள். மாண­விகள் மீது பாலியல் குற்றம் புரி­கின்­றார்கள் என குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இது உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும். பாட­சா­லைகள், பாட­சாலை வளா­கங்கள், கல்­லூரி வளா­கங்கள் என்­பன குற்றச் செயல் புரி­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்ட பிர­தே­ச­மல்ல. குற்றச் செயலைச் செய்த எந்­த­வொரு நபரும், தண்­ட­னையில் இருந்து தப்ப முடி­யாது. இத்­த­கைய குற்றச் செயல்­க­ளுக்கு மேல் நீதி­மன்றம் கடு­மை­யான போக்­கையே எடுக்கும். சிறு­வர்கள், மாணவ மாண­விகள் மீது குற்றம் புரியும் சம்­ப­வங்­களை, சமா­தா­ன­மாக இணங்கி வைக்க முடி­யாது.

அக்­குற்றச் செயல்கள் பற்றி பொலி­சா­ருக்கு அறி­விக்­கப்­பட வேண்­டி­யது மிக முக்­கி­ய­மா­ன­தாகும். மாண­விகள் மீது பாலியல் வதை புரியும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு பத்து ஆண்­டு­க­ளுக்கு மேலாக சிறைத் தண்­டனை விதிக்க வேண்டும் என தண்­டனச் சட்­டக்­கோவை மேல் நீதி­மன்­றத்­திற்குப் பரிந்­து­ரைக்­கின்­றது. மாண­வர்கள் மீது ஆசி­ரி­யர்கள் தாக்­குதல் நடத்­து­வதை சிறுவர் பாது­காப்புக் கட்­டளைச் சட்டம் பார­தூ­ர­மான குற்­ற­மாகக் கரு­து­கின்­றது. இந்தக் குற்­றத்­திற்கு மேல் நீதி­மன்­றத்­தினால் 7 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை விதிக்க முடியும்.இதே குற்­றத்தை சிறு­வர்­களைக் கொடுமைப் படுத்­திய குற்­ற­மாக தண்­டனைச் சட்டக் கோவை சுட்­டிக்­காட்டி, சிறைத்­தண்­டனை வழங்க வேண்டும் என்று மேல் நீதி­மன்­றத்­திற்குப் பரிந்­துரை செய்­கின்­றது. மிக முக்­கி­ய­மாக ஆசி­ரியர் மாண­வனைத் தாக்­கு­வது, சிறு­வர்­களைக் கொடு­மைப்­ப­டுத்தும் குற்றம் என குறிப்­பிட்டு, அது மேல் நீதி­மன்­றத்­தினால் 7 ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதிக்­கக்­கூ­டிய குற்றம் என, சித்­தி­ர­வதைச் சட்­டமும் பரிந்­துரை செய்­கின்­றது, இலங்கை அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் 13 ஆம் பிரிவு மாண­வனை ஆசி­ரியர் தாக்­கு­வது சித்­தி­ர­வதை என்றும், அது ஓர் அடிப்­படை உரிமை மீறல் எனவும் குறிப்­பி­டு­கின்­றது. மாண­வனைத் தாக்­கிய ஆசி­ரி­ய­ருக்கு எதி­ராக அடிப்­படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என, அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் 126 ஆம் பிரிவில் பரிந்­துரை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. 

ஆசி­ரியர் மாண­வ­னுக்கு அடிப்­பது என்­பது, ஒழுக்­கத்தை வலி­யு­றுத்­து­வ­தற்­கான ஒரு நட­வ­டிக்கை என முன்­னொரு காலத்தில் கரு­தப்­பட்­டது. அது மாண­வர்­க­ளுக்­கான ஒழுக்­காற்று நட­வ­டிக்கை என்ற அடிப்­ப­டையில் அன்று அதனை சமூகம் அங்­கீ­க­ரித்­தி­ருந்­தது. அது ஒரு குற்­ற­மாக அப்­போது கரு­தப்­ப­ட­வில்லை. ஆனால் இன்று ஆசி­ரியர் மாண­வ­னுக்கு அடிப்­பது என்­பது ஒரு பார­தூ­ர­மான குற்றச் செயல் என நியதிச் சட்­டங்கள் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றன. அதன் அடிப்­ப­டையில் மாண­வர்­களை அடிக்­கின்ற ஆசி­ரி­யர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­த­கைய குற்­றங்­க­ளுக்கு சிறைத் தண்­டனை வழங்க மேல் நீதி­மன்­றத்­திற்கு அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. மற்­று­மொரு பக்­கத்தில் ஆசி­ரி­யர்கள் மீது மாண­வர்கள் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைப்­ப­தாக ஆசி­ரி­யர்­க­ளினால் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. ஆசி­ரியர் மீது மாணவன் பொய்க்­குற்றச் சாட்டு ஒன்றை முன்­வைத்­த­தாக நீதி­மன்ற விசா­ர­ணையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்டால், பொய்க் குற்றம் சாட்டி, அதன் அடிப்­ப­டையில் வழக்கு தாக்கல் செய்த குற்­றத்­திற்­காக அந்த மாண­வ­னுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும் சட்டம் பரிந்­துரை செய்­கின்­றது.

ஆசி­ரி­யர்கள் மட்­டு­மல்ல. மாண­வர்­களும் ஆசி­ரி­யர்கள் மீது பொய்க்­குற்றம் சுமத்தி குற்றச் செயல் புரிய முடி­யாது. அதற்கு சட்டம் இட­ம­ளிக்­க­வில்லை. யாழ்ப்­பாண சமூ­கத்தில் மாண­வ­னுக்கும் ஆசா­னுக்கும் இடையில் குரு சிஷ்யன் என்ற ரீதியில் இன்றும் 95 வீதம் உறவு திறம்­பட காணப்­ப­டு­கின்­றது.  ஆனால் 5 வீத­மான ஆசி­ரி­யர்­க­ளி­னதும், மாண­வர்­க­ளி­னதும் செயற்­பா­டு­களே யாழ். குடா­நாட்டின் கல்விச் சமூ­கத்தை வருத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த விவ­கா­ரத்தில் சட்­டத்தைப் பற்றி தெரி­யாது என நீதி­மன்றில் விவாதம் செய்ய முடி­யாது. 

எனவே ஆசி­ரி­யர்கள் மாண­வி­களைத் தொடவே கூடாது. ஆசி­ரி­யர்கள் மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்­தவே கூடாது. ஆசி­ரி­யர்கள் மாண­வர்­க­ளுக்கு ஏட்டுக் கல்­வியை மட்­டு­மல்ல ஒழுக்­கத்­தையும் சேர்த்துப் போதிக்க வேண்டும். அதே­வேளை, ஆசி­ரி­யர்­களை சிரம் தாழ்த்தி வணங்கும் குரு­வாக மாண­வர்கள் அனை­வரும் மதிக்க வேண்டும். பாட­சா­லை­களில் அல்­லது பாட­சாலை வளா­கத்தில் குற்றச் செயல்கள் இடம்­பெற்றால்,  உட­ன­டி­யாக அவை­பற்றி பொலி­ஸா­ருக்கு அறி­விக்க வேண்டும். ஆசி­ரி­யர்கள், அதி­பர்­களோ அல்­லது வலயக் கல்வி அலு­வ­லகம் உட்­பட கல்வித் திணைக்­க­ளத்தைச் சேர்ந்த உய­ர­தி­கா­ரி­களோ குற்றச் செயல்­களை மூடி மறைக்கக் கூடாது. பாட­சா­லையின் கௌரவம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்ற போர்­வையில் குற்றச் செயலை மூடி மறைப்­பது தண்­ட­னைக்­கு­ரிய குற்றச் செய­லாகும் என்­பதை அனை­வரும் கவ­னத்திற் கொள்ள வேண்டும்.  மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யது, மாண­விகள் மீது பாலியல் வதை  புரிந்தது என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மேல் நீதிமன்றத்திற்கு வரும் ஆசிரியர்களுக்கு இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது. இத்தகைய குற்றச் செயல்களுக்கு மேல் நீதிமன்றம் கடுமையான போக்கையே எடுக்கும்.  

யாழ்ப்பாண சிறை நிரப்புப் போராட்டத்தில் மாணவர்களைப் பின்தள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் இருக்கின்ற வெட்கக் கேடான செயற்பாடு தற்சமயம் அரங்கேறுகின்றது. சட்டத்தைக் கையில் எடுத்து வன்செயலில் ஈடுபடும் எந்த நபரும், சட்டவாட்சிக்கு எதிரானவர்கள் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். தெரியாமல் செய்யும் தவறு மன்னிக்கப்படும். தெரிந்து செய்யும் தவறு மன்னிக்கப்படமாட்டாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08