அரசாங்கத்தை சிரமத்துக்குள்ளாக்காமல் இணைந்து செயற்பட தீர்மானித்திருக்கின்றோம்: திஸ்ஸ விதாரண

Published By: J.G.Stephan

22 Oct, 2020 | 04:26 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்)

புதிய அரசியலமைப்பில் இரட்டை பிரஜா உரிமை தொடர்பான விடயங்களை மாற்றியமைக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அதனால் ஜனாதிபதியின் வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து செயற்ட தீர்மானித்துள்ளோம் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

1931சோல்பரி ஆட்சிக்காலத்தில் இருந்து நாட்டின் ஜனநாயகம் சக்திமிக்கதாகவே இருந்து வந்தது. அதன் மூலம் கொள்கைகளை அமைத்து தேவையான சட்டதிட்டங்களை அமைத்துக்கொள்ள முடியுமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து சிறிமா பண்டார நாயக்க தலைமையில் 1972 அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது. 

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்த ஜே ஆரின் தலைமையில் 1978இல் அதிகாரத்துக்கு வந்த அரசியலமைப்பு, ஏற்படுத்தப்பட்டு வந்த காலம்தொட்டு பிரச்சினைகளே இருந்து வந்தன. அதன் காரணமாகவே 19முறை அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது 20ஆவது திருத்தமும் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான நிலையில் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றே தேவையாகின்றது. 

அதனடிப்படையில் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அரசிலமைப்பு திருத்தங்கள் வரும்போதெல்லாம் எப்போதும்  ஜனாதிபதியின் அதிகாரத்தை பலப்படுத்துவதற்கு அல்லது பிரதமர் மற்றும் பாராளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கிலே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில் 20ஆவது திருத்தத்திலும் பல பயங்கரமான திருத்தங்கள் இருந்தன. அதில் சிலவிடயங்களை திருத்துமாறு நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது. இதில் முக்கியமான விடயமாக இரட்டை பிரஜா உரிமைக்கு நாங்கள் எமது எதிர்ப்பை ஜனாதிபதிக்கு தெரிவித்து அதில் திருத்தம் மேற்கொள்ளுமாறு தெரிவித்தோம். என்றாலும் தற்போது அதனை மேற்கொள்ள முடியாது என்றும் என்றாலும் அடுத்த வருடம் ஏற்படுத்தப்போகும் புதிய அரசியலமைப்பில் அந்த திருத்தங்களை மேற்கொள்வதாகவும் எமக்கு உறுதியளித்தார்.

ஜனாதிபதியின் உறுதிமொழியை நாங்கள் நம்புகின்றோம். அதனால் புதிய அரசிலமைப்பு நாட்டில் இருக்கும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.  நாட்டின் தற்போதுள்ள நிலைமையில் அரசாங்கத்தை சிரமத்துக்குள்ளாக்காமல் இணைந்து செயற்பட தீர்மானித்திருக்கின்றோம் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01