கடற்றொழில் சார் செயற்பாட்டாளர்கள் டக்ளஸ் தேவானந்தா விடுக்கும் வேண்டுகோள்

Published By: Digital Desk 3

22 Oct, 2020 | 03:43 PM
image

நாடளாவிய ரீதியில் கடற்சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சமூகப் பொறுப்போடு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தைப் பகுதியில்  20 அம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்று நீக்கிகளைத் தெளித்து சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில்,  21 ஆம் திகதி )பேலியாகொடை  மீன் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரினால் குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினரின் புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.  மக்களின் அன்றாட உணவுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு, நாடளாவிய ரீதியில் கடற்றொழில் சார் நடவடிக்கைகளைத் தொடர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது  என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைவரும் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளிகளைப் பேணி தொழில் செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07