வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட மேலும் இருவருக்கு கொரோனா

Published By: Digital Desk 3

22 Oct, 2020 | 01:54 PM
image

வவுனியா வடக்கில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுவரும் பிரபல நிறுவனத்தை சேர்ந்த மூன்று ஊழியர்களிற்கு கொரோனா தொற்று இருந்தமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெற்கை சேர்ந்த குறித்த ஒப்பந்த நிறுவனம் வவுனியா வடக்கின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

அங்கு பணியாற்றும் 27 பேருக்கு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

பரிசோதனை முடிவுகளிற்கமைய தென்பகுதிகளில் இருந்து அண்மையில் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த 3 ஊழியர்களிற்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் அதில் மேலும் இருவரது முடிவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்த நிலையில் இன்றையதினம் வெளியாகியது. அதன்படி அந்த இரண்டு ஊழியர்களிற்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நிறுவனத்தை சேர்ந்த 82 ஊழியர்களிற்கு இன்றையதினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12