கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேருக்கு தொற்றில்லை - பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரி

Published By: Digital Desk 3

22 Oct, 2020 | 12:11 PM
image

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தொழிலின் நிமித்தம் வருகை தந்து தங்கியுள்ள 30 பேருக்கே இவ்வாறு கடந்த திங்கட்கிழமை மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த மாதிரிகளில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை நேற்று  கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேலும் சில ஒப்பந்த நிறுவனங்களில் இவ்வாறு வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவு்ம, அவர்கள் தொடர்பிலான தகவல்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளி மாவட்டங்களிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தங்கியுள்ள அனைவரும் தம்மை பற்றிய தகவல்களை சுகாதார சேவைகள் பணிமனைக்கு கிடைக்கக்கூடிய வகையில்  பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் குறித்த தொற்று மாவட்டத்தில் பரவாமலும், அதனை தடுக்கும் வகையிலும் பொறுப்புடன் மக்கள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், வெளி இடங்களில் இருந்து ஏதோவொரு காரணங்களிற்காக வருகை தரும் மக்கள் மற்றும் தொழிலின் நிமித்தம் வெளி இடங்களிற்கு சென்று சொந்த இடங்களிற்கு திரும்பியோர் இவ்விடயம் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு இதுவரை தகவல்கள் வழங்காது இருப்போர் நேரடியாக சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும், அல்லத பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர், கிராம சேவையாளர் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களிற்கு தகவலை வழங்கி பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு வெளிப்படைத்தன்மையாக நடந்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் கொரோனா தொற்றிலிருந்து தம்மையும், ஏனைய மக்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03