பேலியகொடை பகுதியில் உள்ள சீனி களஞ்சியசாலை ஒன்றிலிருந்து நேற்று மீடு்கப்பட்ட 274 கிலோ கொகேயின் பிரேசிலிருந்து போர்த்துக்கல் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பேலியகொடை நுகே வீதியில் அமைந்துள்ள சீனி களஞ்சியசாலையின் சந்தேகத்திற்குரிய வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கொள்கலன்களில் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினருடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய சோதனையில் குறித்த கொகேயின் தொகை கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மீட்கப்பட்ட அதிக தொகை கொகேயின் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.