20 ஆவது திருத்தத்தினூடாக ஜனாதிபதியை பலப்படுத்த வேண்டும் - பிரதமர்

Published By: Vishnu

21 Oct, 2020 | 09:29 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து ஜனாதிபதியை பலப்படுத்த வேண்டிய அவசியம் எமக்கு உள்ளது எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில், பலமான நாட்டினை உருவாக்க 20 ஆம் திருத்தத்திற்கு சகலரதும் ஆதரவை வேண்டும் என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, 20 ஆம் திருத்த சட்டமூலம் மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் கூறினார்.

நடைமுறையில் இருக்கும் அரசியல் அமைப்பை இனியும் தொடர்ந்து கொண்டு செல்லாது, தேசத்தை கட்டியெழுப்பும் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கும் வரையில் நாட்டின் வேலைத்திட்டங்களை 20 ஆம் திருத்தத்தின் மூலமாக கொண்டு செல்லவே எதிர்பார்த்துள்ளளோம்.

நாம் 20 ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவருவதன் நோக்கம் என்னவெனில் மக்களுக்கு வேண்டாம் என்ற நிலையை உருவாக்கிய 19 ஆம் திருத்த சட்டத்தை நீக்கவேயாகும். இதனை உருவாக்கிய நபர்களே இன்று 19 ஆம் திருத்தத்தை எதிர்க்கும் நிலைமை உருவாகியுள்ளது. தேசிய பாதுகாப்பை இது எவ்வாறு பலவீனப்படுத்தியது என்பதை நாம் பார்த்தோம். 

எனவே 19 ஆம் திருத்தம் ராஜபக்ஷவின் குடும்பத்தை பழிவாங்கவே கொண்டுவரப்பட்டது. இதனால் இறுதியில் இராச்சியமே பலவீனமடைந்தது. 

ஆகவே 20 ஆம் திருத்தம் மீதான எதிர்ப்புக் கருத்துக்கள் எழுந்தாலும் 19 ஆம் திருத்தத்தில் உள்ள மோசமான எந்தவொரு விடயமும் 20 ஆம் திருத்தத்தில் இல்லை.

நாட்டின் ஒற்றையாட்சி முறைமையை பாதுகாக்க வேண்டும் என கூறியே மக்களின் ஆணையை நாம் கேட்டோம். அதில் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவருவோம் என கூறினோம். அதற்கமைய மக்கள் ஆணையை கொடுத்துள்ளனர். 

ஜனாதிபதிக்கும் முழுமையான மக்கள் ஆணையை உள்ளது, வெறுமனே மக்களின் ஆணை பாராளுமன்றத்துடன் மட்டுப்பட்டுவிட்டதாக நினைத்துவிட வேண்டாம். அதேபோல் ஒற்றையாட்சி, தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களில் மக்கள் ஜனாதிபதியையே நம்புகின்றனர். 

ஒரு சட்டத்தின் கீழ் ஜனாதிபதி நாட்டை முன்னெடுத்து செல்வார் என மக்கள் நம்புகின்றனர். ஆகவே அதற்கமைய ஜனாதிபதியின் மக்கள் ஆணையை சபை சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஜனாதிபதியை பலப்படுத்தும் அரசாங்கத்தை உருவாக்க மக்கள் ஆணையை கேட்டே அரசாங்கத்தை அமைத்துள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58