பிரபல பாதாள உலக குழுத் தலைவரின் நண்பன் ஹெரோயினுடன் கைது

Published By: Digital Desk 4

20 Oct, 2020 | 03:37 PM
image

(செ.தேன்மொழி)

வெளிநாட்டிற்கு தப்பி சென்று தலைமறைவாகியுள்ள பிரபல பாதாள உலக குழுத்தலைவரான கேசல்வத்த தினுவின் நெருங்கிய நண்பனான 'ஆந்துருப்பு வீதி அசேன்'  என்ற நபர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுக்க - ஐயமுதுகம பகுதியில்  இன்று செவ்வாய்கிழமை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் 100 மில்லிகிராம்  ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பாதுக்க மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதுடன் , இவ்வாறான கடத்தல் நடவடிக்கைக்காக குறித்த ஹெரோயின் போதைப்பொருளை எடுத்தச்சென்று கொண்டிருந்த போதே குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

 கேசல்வத்த தினுகவினால் திட்டமிடப்படும் போதைப்பொருள் கடத்தலை சந்தேக நபரே செயற்படுத்தி வருவதுடன், குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய மேலும் பல சந்தேக  நபர்களை கைது செய்ய  எதிர்பார்த்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05