சீனாவின் சங்காய் நகரில் நேற்று பிற்பகல் கடல் விமானமொன்றின் அங்குரார்ப்பண பறப்பு வைபவத்தின் போது, முக்கிய விருந்தினர்கள் சகிதம் பறந்த அந்த விமானம் நெடுஞ்சாலைப் பாலத்தில் மீது விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

30 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அந்த விமானத்தில் சம்பவம் இடம்பெற்ற போது இரு விமான ஊழியர்கள் 8 விருந்தினர்கள் உட்பட 10 பேர் பயணித்துள்ளனர்.

மேற்படி விமானத்தில் பயணித்த விருந்தினர்களில் அநேகர் அரசாங்க அதிகாரிகளும் ஊடகவியலாளர்களுமாவர்.விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்த அந்த விமானம் இராட்சத பாரந்தூக்கி உபகரணம் மூலம் கடலிலிருந்து தூக்கப்பட்டது.