முன்னாள் சதோச தலைவர் நலின் பெர்னாண்டோவை  எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது உத்தியோகபூர்வ வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இன்று காலை குற்றத்தடுப்பு பிரிவினரால் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.