தமிழ்த் தலைவர்களும் ஒற்றுமையும்

Published By: Gayathri

19 Oct, 2020 | 10:51 AM
image

தமிழ்க் கட்சிகளையோ தமிழ்த் தலைவர்களையோ  ஒன்று சேர்ப்பது என்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. இது தென்பகுதி அரசியல்வாதிகளுக்கும் தெரிந்த விடயம்.

இதற்கான முக்கிய காரணம் தமிழ்த் தலைவர்கள் என்று கூறிக் கொள்வோர் தனக்கென தனி நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுபவர்களே அன்றி அவர்களுக்கென பொது நிகழ்ச்சி நிரல் ஒன்றும் இல்லை என்பது பொதுவான அபிப்பிராயம்.

இவற்றுக்கு மத்தியில் ஒருவாறு  தமிழ்தேசிய பரப்பில் உள்ள அனைத்து கட்சிகளும் ஸ்தாபன ரீதியாக செயற்படுவது குறித்து ஆராய்வதற்கு 7 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நேற்று முன்தினம் காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்து இந்தத்தீர்மானத்துக்கு வந்துள்ளதுடன், குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை  சேனாதிராஜா, தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைக்கும் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் நாம் அனைவரும் ஓரணியில் இணைந்து பயணிப்பது என்று தீர்மானித்துள்ளோம். 

குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அனைத்து கட்சிகளும் ஒன்றுகூடி ஓரணியில் பயணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதன் அடிப்படையில் வடக்கு, கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளனர். 

அதாவது, மக்களின் உரிமை பயணத்தில் ஒற்றுமையாக பயணிப்பதற்கு இணைந்து கொண்ட தமிழ் கட்சிகள் இன்னும் பலம் அடையவேண்டும்.

அது போன்று ஏனைய தமிழ் கட்சிகளும் ஒரே குடையின் கீழ் இணைந்து செயற்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். 

இது தொடர்பில் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மிக மிக கவனத்தில் கொள்ளப்படவேண்டும். 

கிழக்கில் தமிழ் மக்களின் இனப்பரம்பல் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது.

பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் பிரதிநிதித்துவத்தை இழந்தோம். திருமலையில் நலிந்த நிலையில் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துள்ளோம்.

மாகாணசபை தமிழர் கையில் இருக்கவேண்டுமாயின் வடக்கு, கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையின் அரசியல், பௌத்த மதத் தலைவர்களின் சொல்லாலும் செயலாலும் தீர்மானிக்கப்படுகின்றது. 

அவ்வாறிருக்க சிறுபான்மை தமிழ் மக்கள் மதத் தலைவர்களின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் பின்பற்றுவது அவசியமாகும்.

இன்றைய சூழலில் தமிழ் மக்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது என்பதே கசப்பான உண்மை.

எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற எண்ணக்கருவே அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் துயரைத் துடைக்க வேண்டுமாயின் தமிழ் கட்சிகள் ஒன்றுபடவேண்டும். 

குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொள்ளாது புறக்கணித்தமை தமிழ் மக்களை விசனம் அடையச் செய்துள்ளது.

கடந்த தடவையும் கூட்டத்தில் கலந்துகொள்ளாது குறித்த கட்சி நொண்டிச் சாட்டுகளை முன்வைத்திருந்தாக தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் இழப்புகள், துயரங்கள் என்பவற்றைக் கருத்திற் கொண்டாவது தமிழ் தலைமைகள் தமக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை கைவிட்டு ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21