பலவந்தமாக காணாமல் போவதை தடுக்கும் ஐ.நா. சாசனத்தில் இலங்கை கைச்சாத்து

Published By: Robert

11 Dec, 2015 | 09:10 AM
image

பல­வந்­த­மாக காணா­மல்­போ­வதை தடுக் கும் ஐக்­கிய நாடுகள் சபையின் சாச­னத்தில் இலங்கை கைச்­சாத்­திட்­டுள்­ளது. அடுத்த ஆண்­டு­முதல் இந்த சாச­னத்தின் பிர­காரம் இலங்­கை செயற்­படும் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

எதிர்­கா­லத்தில் இவ்­வாறு ஏதேனும் சம்­ப­வங்கள் நடக்கும் பட்­சத்தில் இந்த சாச­னத்தின் சட்­ட­திட்­டத்­துக்கு அமைய அர­சாங்­கத்­திற்கே முழு­மை­யான பொறுப்­பு­க­ளையும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­படும். அதேபோல் சர்­வ­தேச மட்­டத்­திலும் இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்

இன்று சர்­வ­தேச மனித உரி­மைகள் தின­மாகும். இந்த தினத்தில் சர்­வ­தேச நாடு­க­ளுடன் நாமும் கைகோர்த்து அனுஷ்­டிக்­கின்றோம். அதேபோல் இம்­முறை எப்­போதும் இல்­லாத வகையில் வழமைக்கு மாறாக நிரந்­த­ர­மாக மனித உரி­மை­களை பாது­காக்கும் வேலைத்­திட்டம் ஒன்றை செய்­துள்ளோம். அதா­வது நியூயோர்க் நகரில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடு­களின் தலைமை அலு­வ­ல­கத்தில் செயற்­படும் எமது நிரந்­தர வதி­விடப் பிர­தி­நிதி இன்று(நேற்று) பல­வந்­த­மாக காணா­மல்­போ­வதை தடுக்கும் அனைத்து நாடு­க­ளுக்­கான ஐக்­கிய நாடு­களின் சாச­னத்தில் கைச்­சாத்­திட்­டுள்ளார். இந்த அர­சாங்­கத்தை மக்கள் பலப்­ப­டுத்­திய வேலைத்­திட்­டத்தில் முக்­கி­ய­மான விட­ய­மாக அமைந்­தது நாட்டில் சகல மக்­க­ளி­னதும் மனித உரி­மை­களை பாது­காத்து அவர்­களின் செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தே­யாகும்.

அமைச்­ச­ரவை கூட்­டத்தின் போதும் இந்த விவ­காரம் தொடர்பில் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் பெற்­றுக்­கொள்ள முடிந்­தது. ஆகவே மனித உரி­மைகள் தொடர்பில் எமது அர­சாங்கம் காட்டும் அக்­கறை மீண்டும் ஒரு­முறை நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த வகையில் நேற்று ஐக்­கிய நாடு­களின் இலங்­கையின் நிரந்­தர வதி­விடப் பிர­தி­நிதி இந்த உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்டார். இலங்­கையில் மனித உரி­மை­களை நிரந்­த­ர­மாக பாது­காக்கும் வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­துள்ளோம். ஆகவே இந்த சாசனம் தொடர்பில் விரைவில் நீதி­ப­திகள் சபையில் சமர்ப்­பித்து அவர்­களின் அனு­ம­தியின் பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து அடுத்த ஆண்டு முதல் இந்த சட்­டத்தின் கீழ் அர­சாங்கம் செயற்­படும் வகையில் நாம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம்.

கடந்த காலத்தில் இலங்­கையில் இன,மத அடிப்­ப­டையில் மக்கள் கடத்­தப்­பட்டு காணாமல் போனமை எம் அனை­வ­ருக்கும் நினைவில் உள்­ளது. முக்­கி­ய­மாக கடந்த 10 ஆண்­டு­களில் நாட்­டினுள் நடந்த மோச­மான நிலை­மைகள், பிரச்­சி­னைகள் இல்­லாத சூழ்­நி­லை­யிலும் காணாமல் போவதை தடுக்­க­மு­டி­யாத ஒரு சூழ்­நிலை இருந்­தமை அனை­வரும் அறிந்­த­தே­யாகும். ஆகவே இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்­களும் தமது பாது­காப்பை பலப்­ப­டுத்தும் வகை­யிலும், கடத்தல் கலா­சா­ரத்தை முழு­மை­யாக இந்த நாட்டில் இருந்து ஒழிக்கும் வகையில் இந்த சாச­னத்தில் நாம் கைச்­சாத்­திட்­டுள்ளோம்.

கேள்வி :- கடந்த காலத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் காணாமல் போயுள்­ளனர். இவர்கள் தொடர்பில் இந்த சாச­னத்தில் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும்?

உண்­மையில் இந்த சாச­னத்தில் நாம் கைச்­சாத்­திட்­டுள்­ள­மை­யா­னது எதிர்­கா­லத்தை கருத்தில் கொண்­டே­யாகும். எதிர்­கா­லத்தில் யாரும் கடத்­தப்­ப­டக்­கூ­டாது என்­பதை கருத்தில் கொண்டே மேற்­கொண்­டுள்ளோம். ஆனாலும் கடந்த கால­கட்­டத்தில் நடந்த சம்­ப­வங்கள் தொடர்­பிலும், உண்­மை­களை கண்­ட­றி­வது தொடர்­பிலும், மக்­க­ளுக்­கான இழப்­பீ­டு­களை பெற்­றுக்­கொ­டுப்பது தொடர்­பிலும் தேவை­யான பொறி­மு­றையை உரு­வாக்கி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். அதேபோல் ஜெனி­வாவில் கூட இந்த விவ­கா­ரங்கள் தொடர்பில் உள்­நாட்டு பொறி­மு­றையில் தீர்வை பெற்றுத் தரு­வ­தாக நாம் வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்ளோம். ஆகவே உள்­ளக பொறி­மு­றை­களை பலப்­ப­டுத்தி எமது நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­துவோம்.

கேள்வி:-எதிர்­கா­லத்தில் மீண்டும் கடத்­தல்கள் போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெற்றால் இந்த சாசனம் எவ்­வாறு உத­வப்­போ­கின்­றது?

இலங்­கையில் எதிர்­கா­லத்தில் இவ்­வாறு காணாமல் போகும் சம்­ப­வங்கள் நடை­பெறும் என்று நான் நம்­ப­வில்லை. எனினும் அவ்­வாறு ஏதேனும் நடக்கும் பட்­சத்தில் இந்த சாச­னத்தின் சட்­ட­திட்­டத்­துக்கு அமைய அப்­போ­தி­ருக்கும் அர­சாங்­கத்­திற்கே சம்­ப­வங்கள் தொடர்பில் முழு­மை­யான பொறுப்­பு­க­ளையும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­படும். தட்­டிக்­க­ழிக்க எந்த வகை­யிலும் வாய்ப்­புகள் இல்லை. அதேபோல் தேசிய ரீதி­யிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56