இறைச்சிக்காக வெட்டப்பட்ட கடலாமைகளுடன் மூவர் கைது

Published By: Digital Desk 4

18 Oct, 2020 | 01:03 PM
image

மாரவில - தொடுவாவ கரையோரப் பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட கடலாமைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்று சனிக்கிழமை மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தொடுவாவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை காலை மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற போதே கடலாமைகளைப் பிடித்துள்ளனர். 

அவற்றினை விற்பனை செய்யும் நோக்குடன் இரகசியமாக கொண்டு வந்துள்ளதாகவும் அவர்கள் இவ்வாறு நீண்ட நாட்களாக கடலாமைகளைப் பிடித்து அவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கடலாமை ஓடுகள், 20 கிலோ நிறையுடைய கடலாமை இறைச்சி, தராசு  மற்றும் கத்திகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடு;த்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15