திருமலையில் புதையல் தோண்டிய ஒன்பது பேருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

18 Oct, 2020 | 11:48 AM
image

 திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய ஒன்பது சந்தேக நபர்களை இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் மஹ்ரூப் நேற்று சனிக்கிழமை (17) உத்தரவிட்டார்.

நிலாவெளி, வெருகல், ஹிங்ராக்கொட, தோப்பூர் மற்றும் கொழும்பு,காலி பகுதியைச் சேர்ந்த 38,20,29,40,41,27, மற்றும் 47 வயதுடைய ஒன்பது பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஈச்சிலம்பற்று, வட்டவான் எழுத்துக்கல்மலை பகுதியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த வேளையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின் போது ஒன்பது சந்தேக நபர்களையும் கைது   செய்து சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும்,சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள்  நான்கு அடிக்கு மேல் புதையல் தோண்டியுள்ளதாகவும் சந்தேக நபர்கள் பயன்படுத்திய அலவாங்கு 2, மண்வெட்டி 2, தாட்சி 2, சவல் 2 மற்றும் கூடைகள் 3, பிக்காஸ் 1 போன்றன கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை பொலிஸார் மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42