சிறுபான்மை தரப்புக்கள் 20ஐ முழுமையாக எதிர்க்கும் : சுமந்திரன்

Published By: R. Kalaichelvan

18 Oct, 2020 | 09:25 AM
image

(ஆர்.ராம்)

20ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக எதிர்ப்பதென்ற தீர்மானத்தில் உறுதியாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும்,  யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ரூபவ் தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 20இற்கு எதிரான கூட்டுச் செயற்பாடுகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 21ஆம் 22ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் 20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

20ஆவது திருத்தத்தினை ஆரம்பத்திலிருந்தே முற்று முழுதாக எதிர்க்கிறோம். அதனை ஒட்டு மொத்தமாக ஜனநாயக விரோத செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது. 

அது மட்டுமி ல்லாமல் அதிகாரப் பகிர்வு தத்துவத்தை மீறியதாகவே 20ஆவது திருத்தம் உள்ளது. அரச அதிகாரங்கள் மூன்று நிறுவனங்களிடம் இருக்க வேண்டும்.

அதில் ஒவ்வொன்றும் இன்னொன்றினுடைய செயற்பாட்டை மேற்பார்வை செய்ய வேண்டும். ஆனால் 20ஆவது திருத்தம் அவற்றை எல்லாம் மீறி அனைத்து அதிகாரங்களும் ஒரு நிறுவனத்திடம் குறிப்பாக நபர் ஒருவரிடத்தில் அதிகாரங்களை கொடுப்பதாகவே அமைகிறது.

இதனால் இந்த திருத்தினை ஆரம்பத்திலிருந்தே நாம் எதிர்த்து வருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

நாம் அதில் உள்ள அனைத்து ஏற்பாடுகளையும் எதிர்ப்பதாக கூறியுள்ளோம். ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானம் பாராளுமன்றத்திற்கு அனுப்பபட்டுள்ளது. அது எவ்வாறாக இருந்தாலும் ஒட்டு மொத்தமாக 20ஐ எதிர்ப்பதே எமது நிலைப்பாடாகும்.

இந்த நிலைப்பாட்டை உடைய முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்களுடனும் பேச்சுக்களை முன்னெடுத்தபோது இந்த விடயத்தில் கூட்டிணைந்து எதிர்ப்பினை வெளியிடுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56