முடியாட்சிக்கு எதிராக திரளும் தாய்லாந்து மக்கள்

18 Oct, 2020 | 08:18 AM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

இராணுவம் கோலோச்சும் பௌத்த தேசம். அங்கு அரசிற்கு எதிராகத் திரண்ட இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள். தலைநகரிலுள்ள அரச மாளிகைக்கு முன்னால் திரள்கிறார்கள். தமது உணர்வுகள் வாசகமாக எழுதப்பட்ட நடுகல்லை நடுகிறார்கள். அதில் ‘இந்நாடு மக்களுக்கு சொந்தமானது. அரண்மனைக்கு அல்ல’ என்று எழுதப்பட்டுள்ளது.

இந்தத் தேசம் தாய்லாந்து. முடியாட்சி அரசியல்யாப்பின் அடிப்படையிலான ஆட்சி நிர்வாகம். அங்கு ஆர்ப்பாட்டங்கள் புதியவை அல்ல. எனினும் முடியாட்சிக்கு எதிராக பாங்கொக் அரண்மனைக்கு முன்னால் நடுகல் நடுவது புதியது. தாய்லாந்தில் முற்றுமுழுதான மன்னராட்சிக்கு முடிவுகட்டப்பட்டு 88 வருடங்களுக்குப் பின்னர் நிகழ்வது.

ஒருபுறத்தில் கொவிட்-19 தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கங்கள். மறுபுறத்தில் அரசின் கடுமையான ஒடுக்குமுறைகள். இவற்றுக்கு மத்தியில் ஜனநாயகம் கோரி ஆர்ப்பாட்டம் செய்வதொன்றும் இலகுவான காரியமல்ல. இளம் சந்ததியின் மத்தியில் மாற்றத்தின் தேவை வீரியமானதொரு வித்தாக விதைக்கப்பட்டிருந்தால் மாத்திரமேரூபவ் இத்தகைய தைரியமான போராட்டங்கள் சாத்தியப்படும்.

மன்னராட்சியை மறுசீரமைக்க வேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதான கோரிக்கை. எனினும் தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கும் அவாவும் போராட்டங்கள் ஊடாக வெளிப்படுகிறது.

தாய்லாந்து வித்தியாசமான தேசம். அங்கு மன்னரை கடவுளாக மதிக்கும் சட்டங்களும் ஏற்பாடுகளும்; உண்டு. மன்னர் குடும்பத்தை எவரும் விமர்சிக்க முடியாது. விமர்சித்தால் ஆகக்கூடுதலாக 15 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கும் சட்டமும் உண்டு.

இங்கு 1932 இல் இராணுவ சதிப்புரட்சியின் மூலம் முற்றுமுழுதான மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டு, முடியாட்சி அரசியல் யாப்பு தாபிக்கப்பட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தின் மூலம் ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கும் ஏற்பாடுகள் உண்டு தான். எனினும், இந்த அரசாங்கத்தை விடவும் இராணுவத்தின் செல்வாக்கு அதிகம்.

உதாரணமாகக் கூறுவதானால், 1932ஆம் ஆண்டுக்குப் பின்னர் 13 தடவைகள் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். தற்போதைய பிரதமர் பிரயுத் சா ஓச்சாவும் ஆறு வருடங்களுக்கு முன்னதாக இராணுவ சதிப்புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவர் தான்.

தாய்லாந்தின் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்பில் பௌத்த கோட்பாடுகளை பேணிப் பாதுகாக்கும் காவலராக மன்னர் கருதப்படுகிறார். அவரை மதிக்கும் பாரம்பரியம் தாய்லாந்து மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது. இதில் ஆச்சர்யம் இல்லை.

இருந்தபோதிலும்ரூபவ் அரியாசனத்தில் அமர்ந்திருப்பவர் தறிகெட்டுச் சென்று, கொடுங்கோன்மை புரிகையில் தாம் பொறுமை காக்க வேண்டுமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

தாய்லாந்து மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்ரூபவ் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த பூமிபோல் அத்துல்யாதவ். தற்போது ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர் அவரது மகன் வஜிராலங்கோன்.

மன்னர் பூமிபோல் அரசியல் சாணக்கியம் மிக்கவராக இருந்தார். இராணுவத்தின் பலம் அவருக்குத் தெரியும். அவர் இராணுவத்திற்கு அங்கீகாரம் வழங்கினார். இராணுவம் அவருக்கு உதவி செய்தது. இருதரப்பும் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் ஆட்சி நிர்வாகத்தைக் கொண்டு சென்றன.

மன்னர் வஜிராலங்கோனுக்கு மக்கள் முக்கியமில்லை. தமது சுகபோகங்கள் மீதே அவர் கவனம் செலுத்தினார். அதிகாரங்களைத் தம்மிடம் குவிக்கும் இராணுவ பிரிவை ஸ்தாபித்தார். முடியாட்சி சொத்து தொடர்பான சட்டத்தைத் திருத்தி, அரண்மனைக்கு சேர வேண்டிய கோடிக்கணக்கான சொத்துக்களை தமது பெயருக்கு மாற்றினார்.

மக்கள் கடவுளாக மதிக்கும் அளவிற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கை ஒழுக்கம் மிக்கதாக இருக்கவில்லை. நான்கு தடவைகள் திருமணம் செய்தார். தாம் விரும்பிய பெண்ணை அந்தப்புரத்து ஆசை நாயகியாக உத்தியோகபூர்வமாகவே வரித்துக் கொண்டார். ஒரு பயணப் பிரியராக வெளிநாடுகளில் சுற்றி வந்தார். தாய்லாந்தில் இருந்த நாட்களை விடவும் ஜேர்மனியில் கழித்த நாட்கள் அதிகம்.

ஒருபுறத்தில் பொறுப்பற்ற செயல்கள் என்றால்ரூபவ் மறுபுறத்தில் பிரதமர் பிரயுத் சா- ஓச்சா தலைமையிலான அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள்.

2014ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பிரயுத் சா- ஓச்சாரூபவ் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாகத் தான் ஆரம்பத்தில் கூறினார். அதற்காகவே புதிய அரசியல் யாப்பை வரைந்துரூபவ் கருத்துக் கணிப்பின் மூலம் மக்களின் அங்கீகாரம் கோரினார்.

அந்தக் கருத்துக் கணிப்பும் நேர்மையானது அல்ல. அரசியல் யாப்பும் நல்லது அல்லவென ஜனநாயகம் கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகிறார்கள். இந்த அரசியல்யாப்பின் பிரகாரம் இராணுவ ஆட்சியாளர்களால் நியமிக்கக்கூடிய செனட் சபையொன்று உண்டு. இந்த செனட் சபை பிரதமரின் ஆட்சி காலத்தை ஐந்து வருடகாலத்திற்கு நீடிக்கலாம்.

பிரயுத் சா-ஓச்சா தலைமையிலான அமைப்பின் மூலம் ‘பாதை வரைபடம்’ என்ற பெயரில் 20 வருடகால திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. அதனுடாக ‘இராணுவத்தின் வழிகாட்டலில் இயங்கும் ஜனநாயகம்’ திணிக்கப்படுகிறது. தேசிய மட்டத்திலோரூபவ் பிராந்திய மட்டத்திலோ அரசியல்வாதிகளுக்கு முக்கியத்துவம் கிடையாது.

இந்த அரசியல்யாப்பின் மூலமாகத் தான் கடந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இது வெறும் கண்துடைப்பென ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகிறார்கள். மியன்மாரில் இருப்பதைப் போன்று சிவில்-இராணுவ அரசியல் கட்சியொன்றின் மூலம் ஜனநாயகத்தின் பெயரால் எதேச்சாதிகாரத்தை முன்னெடுத்துச் செல்வது தான் பிரயுத் சான் ஓச்சாவின் அரசியல் வியூகமாக இருக்கிறது.

தாய்லாந்தில் இன்று இருப்பது குடியரசு, அரசியல் யாப்பு என்ற ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பெனக் கூறினாலும்  அதற்குள் ஒரு பொறுப்பற்ற மன்னரின் அதிகாரக் குவிப்பும் ஜனநாயக வேஷம் போடும் இராணுவ ஆட்சியாளரின் கொடுங்கோன்மையும் தானென ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் முடியாட்சியை சீர்திருத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம்ரூபவ் வேறு பரிணாமத்தைப் பெற்றுள்ளது. பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் பிரதமர் பதவி விலக வேண்டும் புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வர வேண்டும், ஒடுக்குமுறைகளை நிறுத்த வேண்டும், அசாங்கத்தை விமர்சித்தமைக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் சேர்ந்ததாக ஆர்ப்பாட்டங்கள் பரிணமித்துள்ளன.

முற்போக்குக் கொள்கைகளுடன் களத்தில் இறங்கி, தேர்தலில் மூன்றாம் இடத்தைப் பெற்ற கட்சியொன்றை கடந்த பெப்ரவரி மாதம் ஆட்சியாளர்கள் தடை செய்ததை அடுத்து, ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்திருந்தன. ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

பெரும்பாலும் மாணவர் குழுக்கள் பங்கேற்றன. இன்று கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் தமது இருப்பு கேள்விக்குறியாக மாறியிருக்கும் நிலையில் ஆர்ப்பாட்டம் வீரியம் பெற்றுள்ளது. இன்று சகல வயதினரும் சகல பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இணைந்திருக்கிறார்கள். இது எந்தத் திசையில் செல்லும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22