வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 50 பேர் விடுவிப்பு

Published By: R. Kalaichelvan

17 Oct, 2020 | 03:38 PM
image

வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த 50 பேர் தன்மைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு இன்று விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிற்கு தொழில் பெற்று சென்று நாட்டிற்குத்திரும்ப முடியாமலிருந்த டுபாய், ஜோர்தான் நாடுகளிலிருந்து 105 பேர் அண்மையில் இலங்கைக்கு விஷேட விமானத்தில் அழைத்து வரப்பட்டு பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் .

இதில் இன்று 50 பேர் தங்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வெளியேறும் நிகழ்வு இன்று இராணுவத்தினரினால் எற்பாடு செய்யப்பட்டது. 

இவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட கொழும்பு, மாத்தறை , பொலனறுவை , எம்பிலிப்பட்டிய போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களே தன்மைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட சான்றிதழ் வழங்கப்பட்டு வெளியேறியுள்ளனர் .

தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோதிலும் அச்ச நிலை காணப்பட்டது.

எனினும் அரசாங்கம் இராணுவத்தினரின் அரவணைப்பு தனிமைப்படுத்தலை அச்சமின்றி நிறைவேற்றி கொண்டதாகவும் வெளிநாடுகளிலிருக்கும் ஏனைய இலங்கையர்களும் இலங்கைக்கு வருகை தருவதுடன் அச்சமின்றி தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொள்ள முடியும் என்றும் மேலும் தெரிவித்துள்ளனர் .

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட மேலும் 55 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29