அசர்பைஜான் நகர் காஞ்சாவில் ஷெல் தாக்குதல் ; 12 பேர் பலி

Published By: Vishnu

17 Oct, 2020 | 04:30 PM
image

அசர்பைஜானின் இரண்டாவது பெரிய நகரமான காஞ்சா மீது இன்று அதிகாலை ஆர்மீனிய படைகளினால் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காஞ்சாவில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக அசெரி பிரதி வழக்குத்தொடுநர் நாயக அலுவலகம்  தெரிவித்துள்ளது. 

எனினும் ஆர்மீனியா இதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறது.

இந்த தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ள ஏனையோரை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அசர்பைஜான் ஜனாதிபதியின் உதவியாளர் ஹிக்மெட் ஹஜியேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அசர்பைஜான் சுரங்க நடவடிக்கைக்கான தேசிய நிறுவனத்தின் (அனாமா) கருத்துப்படி, கஞ்சா மீது வீசப்பட்ட ஏவுகணைகள் ஆரம்பத்தில் SCUD / எல்ப்ரஸ் செயல்பாட்டு-தந்திரோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என அடையாளப்படுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08