ரிதிகம பகுதியில் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞர்  (21) ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த  இளைஞரிடமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் ரிதிகம பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த போலி நாணயத்தாள்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.