ஊடரங்கு சட்டத்தை மீறிய  203 சந்தேக நபர்கள் கைது  : 40 வாகனங்களும் பறிமுதல்!

Published By: R. Kalaichelvan

17 Oct, 2020 | 01:24 PM
image

(செ.தேன்மொழி)

தொற்று நீக்க சட்டவிதிகளுக்கைமய அமுல்படுத்தப்பட்டுள்ள ஊடரங்கு சட்டத்தை மீறிய  203 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 40 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறி யதாவது,

கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கம்பஹா மாவட்டத்தில் கட்டுநாயக்க உட்பட 19 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தொடர்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

இந்நிலையில், குறித்த ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பில் நேற்று காலை ஆறு மணி முதல் இன்று காலை ஆறு மணிவரை 36 சந்தேக நபர்கள் கைது செய்ய ப்பட்டுள்ளனர். குறித்த 24 மணித்தியால சுற்றிவளைப்பின் போதே  ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர் பில் அதிகளவிலானோர்  கைது செய்ய ப்பட்டுள்ளதுடன்,இவர்களில் பெரும்பாலானோர் சீதுவை பகுதிலேயே கைதாகியுள்ளனர்.

இதேவேளை,நேற்று பொலிஸ் ஊரடங்கு  சட்டம்  அமுலில்  உள்ள பிரதேசங்களில் உணவகங்கள்  மற்றும்  மருந்தகங்களை திறந்து  வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆயினும்  நேற்றும் , இன்றும்   குறித்த பிரதேசங்களில்  அதற்கான  அனுமதி  வழங்கப்படவில்லை.

அந்த பகுதிகளில்  ஊரடங்கு  சட்டம் அமுலில்  இருக்கும்.  பயணக்கட்டுப்பாடுகள் காணப்படும். ஆகவே, வெளியில்  நடமாடாது வீடுகளில்  இருக்குமாறு  மக்களிடம்  கேட்டுக்கொள்கின்றோம். இந்த பகுதிகளின் ஊடாக பயணிக்கும் வாகனங்களுக்கு அனுமதி உள்ளது. இருப்பினும்  அந்த பகுதிகளில் மக்களை  ஏற்றுவதற்கோ   , இறக்குவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊரடங்கு  சட்டத்தை மீறியமை  தொடர்பில்   இதுவரையில் 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 40  வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள தொற்று நீக்க சட்டவிதிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01