சர்ச்சையை கிளப்பியுள்ள பின்லாந்து பிரதமரின் படப்பிடிப்பு

Published By: Digital Desk 3

17 Oct, 2020 | 01:07 PM
image

பின்லாந்தின் பிரதமர் சன்ன மரினின் புகைப்படம் அந்நாட்டில் விவாதா பொருளாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு 34 வயதில் பதவியேற்ற உலகின் இளம் பிரதமரான சன்ன மரின், பிரபல பத்திரிக்கைக்கு  பிளேஸரின் கீழே சட்டை எதுவும் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த பத்திரிகை ஒக்டோபர் 9 ஆம் திகதி வெளியான உடனேயே சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில்  சமூக வலைத்தளங்களில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி சன்னா மரினை ஆதரித்து ஏராளமான பெண்கள் அதே போல் ஆடையை அணிந்து படங்களை வெளியிட்டுள்ளனர்.

பிரபல பத்திரிகைக்கு போஸ் கொடுத்த சன்ன மரீன் அணிந்த பிளேசர் அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியானதல்ல என்று ஆட்சேபம் தெரிவித்தவர்கள், இதனால் வாயடைத்துப் போயுள்ளனர்.

இதுபோன்ற படபப்பிடிப்புகளில் ஈடுபடுவதன் மூலம், சர்வதேச அரசியலிலும் பொதுமக்களிடமும் மரின் தனது சொந்த உருவத்தையும் நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறார் என விமர்சனம் எழுந்துள்ளது.

"பிரதமரின் பங்கு ஒரு தலைவராக செயல்படுவதே தவிர பேஷன் மொடலாக அல்ல" என்று ஒருவர் கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்துக்கள் பின்லாந்தில் பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

மரின் பொது வாழ்க்கையிலும், பத்திரிகை தோற்றங்களிலும்  விமர்சனங்களை எதிர்கொண்ட முதல் பெண் அரசியல்வாதியிடமிருந்து வெகு தொலைவில் உள்ளார்.

2016 ஆம் ஆண்டில், முன்னாள் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே சண்டே டைம்ஸ் இதழுக்காக லெதர் கால்சட்டை (leather trousers) அணிந்து படம்பிடிக்கப்பட்டதற்கு விமர்சனத்திற்குள்ளானார்.

இதற்கிடையில், பிரித்தானிய சட்டமன்ற உறுப்பினர் ட்ரேசி பிராபின் அவரது தோள்பட்டையில் உடை சற்று கீழறங்கி இருந்தமையால் இந்த ஆண்டு இணையத்தள பூதங்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13