அமெரிக்காவுடனான ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க புட்டின் விருப்பம்!

Published By: Vishnu

16 Oct, 2020 | 07:16 PM
image

ரஷ்யாவும் அமெரிக்காவும் எந்தவொரு புதிய நிபந்தனைகளையும் விதிக்காமல் 2021 பெப்ரவரி மாதத்தில் காலவாதியாகும் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தமானது ரஷ்யாவும் அமெரிக்காவும் பயன்படுத்தக்கூடிய மூலோபாய அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டுவீச்சுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந் நிலையில் காலாவதியாகும் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்கத் தவறினால், அமெரிக்க மற்றும் ரஷ்ய மூலோபாய அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புகளின் அனைத்து தடைகளையும் நீக்கி, பனிப்போருக்குப் பிந்தைய ஆயுதப் பந்தயம் மற்றும் மொஸ்கோவிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பதட்டங்களைத் தூண்டிவிடும்.

இந் நிலையில் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ள ஜனாதிபதி புட்டின், இந்த ஒப்பந்தம் இப்போது வரை திறம்பட செயல்பட்டு வருவதாகவும், அது செயல்படுவதை நிறுத்தினால் அது மிகவும் வருத்தமாக அமையும் என்றும் கூறினார்.

மேலும் இந்த ஒப்பந்தத்தை நீடிப்பதற்கான எந்தவித உடன்பாடுகளும் அமெரிக்காவுடன் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33