மோடியின் 'ஜல் ஜீவன் திட்டத்தை '  இணைந்ததாக இலங்கைக்கும் ஒரு திட்டம் - இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் எடுத்துரைப்பு 

Published By: Digital Desk 3

16 Oct, 2020 | 05:19 PM
image

(நா.தனுஜா)

இந்தியாவின் அனைத்து வீடுகளுக்கும் தூயநீரை வழங்கும் நோக்கில் பிரதமர் மோடியினால் முன்னெடுக்கப்பட்டவரும் 'ஜல் ஜீவன் திட்டத்துடன்' (வாழ்விற்கு நீர் திட்டம்) இணைந்ததாக ஒரு திட்டத்தை இலங்கையில் முன்னெடுப்பதன் ஊடாக நாட்டில் நிலவும் தூய குடிநீர் பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணக்கூடியதாக இருக்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்திருக்கிறார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று முன்தினம் வியாழக்கிழமை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் கடந்த மாதம் நடைபெற்ற இணையவழி மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வது இந்த சந்திப்பின் அடிப்படை நோக்கமாக அமைந்திருந்தது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர்  இந்தியப் பிரதமருடனேயே முதலாவதாக இணையவழி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். அந்த மாநாடு தொடர்பான தமது திருப்தியை இச்சந்திப்பின் போது இருதரப்பினரும் வெளிப்படுத்தினர்.

மேலும் இதன்போது நீர்விநியோகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் தாம் முக்கியத்துவம் வழங்குவதாக பிரதமர் இந்திய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தார். பாடசாலைகளுக்கு நீர்வழங்கல், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல், மழைநீர் சேகரிப்பு, பின்தங்கிய பிரதேசங்களில் கழிப்பறைகளை நிர்மாணித்தல், இயற்கை உரம் தயாரிப்பு உள்ளடங்கலாக இருநாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றக்கூடிய துறைகள் குறித்து இதன்போது உயர்ஸ்தானிகர் பாக்லே எடுத்துரைத்தார்.

அவருக்குப் பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் குறித்த சில பகுதிகளில் பாதுகாப்பான சுத்தமான குடிநீருக்கு நிலவும் பற்றாக்குறையும் அதன் விளைவாக ஏற்படுகின்ற சிறுநீரகநோய்களும் முக்கிய பிரச்சினையாக இருப்பதாக சுட்டிக்காட்டியதுடன் இதற்கான தீர்வைக் காண்பதற்கே அரசாங்கம் தற்போது முன்னுரிமை வழங்கியிருக்கிறது என்றும் தெரிவித்தார். இதன்போது இந்தியாவின் அனைத்து வீடுகளுக்கும் தூயநீரை வழங்கும் நோக்கில் பிரதமர் மோடியினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் 'ஜல் ஜீவன் திட்டத்துடன்' (வாழ்விற்கு நீர் திட்டம்) இலங்கை தொடர்புகளை ஏற்படுத்தி செயலாற்றுவதற்கான சாத்தியப்பாடுகளை இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார்.

அத்தோடு இலங்கையின் மருந்தாக்கத்துறையில் விசேட கவனம் செலுத்துமாறும் அந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான முதலீடுகளைச் செய்வதற்கு இந்திய முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறும் பிரதமர் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04