யாழில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்றமை தொடர்பில்  76 முறைப்பாடுகள் 

Published By: Digital Desk 4

16 Oct, 2020 | 04:54 PM
image

யாழில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தமை தொடர்பாக  76 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் வடக்கு மாகாண பதில் உதவி  பணிப்பாளர் ஏ.எல்.யவ்பர் சாதிக் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள கொரோணா தொற்று அனர்த்த  நிலைமை காரணமாக பருப்பு ,சீனி மற்றும் ரின்மீன் ஆகிய பொருட்களில் இறக்குமதி வரி விலக்கப்பட்டு பொருட்களுக்கான  கட்டுப்பாட்டு விலையும் அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,

யாழ் மாவட்டத்தில் குறித்த பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படவில்லை எனவும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு இன்றுவரை  76 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஏ.எல்.யவ்பர் சாதிக் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள  நடவடிக்கை  தொடர்பாக ஆராய்ந்து வருவதாக  தெரிவித்த ஏ.எல்.யவ்பர் சாதிக், கிடைக்கப் பெற்ற  முறைப்பாடுகள் தொடர்பில் அதிக விலைக்கு விற்பனை செய்த  வர்த்தக நிலையங்களிற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்கள்சென்று ஆராய்ந்தபோது, வர்த்தகர்கள் தாம்  பழைய விலைக்கு  கொள்வனவு செய்து  இருப்பில்  உள்ள பொருட்களை தாங்கள் பழைய விலைக்கு  விற்பனை செய்வதாகவும்,

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விலைக்கு கொள்வனவு  செய்யும் பொருட்களை அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு  விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர் என மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம்  தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைமைக்  காரியத்தினருடன்  கலந்தாலோசித்து வருவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின்  வடக்கு மாகாண பதில் உதவி  பணிப்பாளர் ஏ எல் யவ்பர் சாதிக் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08