பதுளை அரசினர் வைத்தியசாலையில் தமிழுக்கு ஏற்பட்ட நிலை ; அவதியுறும் மக்கள்

Published By: Digital Desk 4

16 Oct, 2020 | 04:44 PM
image

பதுளை பிரதான பொது வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு சமிஞ்சை வழங்கும் வகையிலான பல்வேறு அறிவித்தல் பலகைகள்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

ஆனால், குறித்த அறிவுறுத்தல்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் குறிப்பதால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு செல்வதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பதுளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள், ஊவா மாகாண ஆளுனர் ஏ.கே.எம். முசாம்மில், ஊவா மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோருக்கும்  அனுப்பப்பட்டுள்ளன.

தொடர்ந்து அக்கடிதத்தில், “ ஊவா மாகாணத்தில் மிகப்பிரதான வைத்தியசாலையாக பதுளை பொது வைத்தியசாலையாகும். குறித்த வைத்தியசாலையில் பெருமளவிலான நோயாளர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகளைப் பெற்றுச் செல்லவும், கடினமான நோயாளர்கள் தங்கிச் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

அத்துடன் பதுளை மாவட்டமென்பது தமிழ் பேசும் மக்கள் கணிசமானளவில் வாழ்ந்து வரும் ஒரு பிரதேசமாகும். இம் மாவட்டம் பெருந்தோட்டங்கள் பலவற்றை சூழ்ந்திருப்பதினால், தமிழ் மக்கள் அதிகாமாக உள்ளனர்.

இத்தகையவர்களுக்கு சிங்கள மொழியில் போதிய பரிச்சியமில்லை. தமிழ் மொழியினை மட்டுமே, இம்மக்கள் பேசுகின்றனர்.

ஆகவே குறித்த வைத்தியசாலையில் பல்வேறு வகையிலான சிகிச்சைகளுக்கு நோயாளர்கள் அனுமதிக்கப்படும் விதிமுறைகள், மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்ளல், நோயாளர்கள் அமர்ந்திருக்கும் இடங்கள், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெறும் நோயாளர்களை பார்வையிடும் நேரங்கள் மற்றும் அது தொடர்பான சுகாதார விதிமுறைகள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்து.

இருந்த போதிலும், அவைகள் தனிச்சிங்கள மொழி மூலமும், பெரும்பாலான அறிவுறுத்தல் காட்சிப் பலகைகளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், சிங்கள மொழியில் மட்டும் சரியாகவும், தமிழ் மொழியில் முற்று முழுதாக தவறான வார்த்தைப் பிரயோகங்களினாலும்,  ஆங்கில மொழி உச்சரிப்பிலும் பிழையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனால், சிங்கள மொழி புரியாத தமிழ் மொழி மட்டும் தெரிந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். 

இது குறித்து வைத்தியசாலை ஊழியர்களிடம் வினவினாலும் உரிய பதில் கிடைக்காமல், தமிழ் நோயாளர்கள் தரக்குறைவாக நடாத்தப்பட்டு வருகின்றனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த உல்லாச பயணிகள் தேவைகருதி, இம் வைத்தியசாலையினை நாடினாலும் இதே நிலையினையே, அவர்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆகவே, தயவுசெய்து மேற்படி விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். சகல நோயாளர்களும் பயன்பெறும் வகையில். இம் வைத்தியசாலையை மாற்றியமைக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நோயாளர் காத்திருக்கும் பகுதி ”நாயாளர்கள் பகுதி” என்ற வகையிலும், மலசலகூடத்தை நோக்கில் ஆண்கள் என்பதற்கு பெண்கள் பகுதியென்றும், பெண்கள் என்பதற்கு ஆண்கள் பகுதியென்றும் மிகத் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சிலவற்றை மட்டும் தங்களின் கவனத்திற்கு முன்வைக்கின்றேன், எனக் குறிபிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00