கொரோனா அச்சம் : 13 ஆம் திகதி ஊடகசந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களிடம் அவசர கோரிக்கை

Published By: Vishnu

16 Oct, 2020 | 03:51 PM
image

2020 ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ இன்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

2020 ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று காலை 9.30 க்கு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுகாதாரப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து ஊடகவியலாளர்களின் தகவல்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் தற்பொழுது சம்பந்தப்பட்ட சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, தேவையேற்பட்டால், சம்பந்தப்பட்ட சுகாதார ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சுகாதாரப் பிரிவினால் இந்த உடகவியலாளர்களுக்கு விரைவாக அறிவிக்கப்படும்.

இருப்பினும், வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என சந்தேகிக்கப்படும் ஊடகவியலாளர் தொடர்பில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் சுகாதார பரிசோதனையின் பெறுபேறு கிடைக்கும் வரையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து ஊடகவியலாளர்களும் வெளி சமூக தொடர்புகளை தவித்துக்கொள்ளல் வேண்டும். பாதுகாப்பாக வீடுகளில்; இருக்குமாறு ஆலோசனை வழங்கி சுகாதார அமைச்சின்  தொற்று நோயியல் பிரிவு எமக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பாக உங்களது நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட ஊடகயிலாளர்களுக்கு தெளிவுபடுத்துமாறு இதன் மூலம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இதற்கு நீங்கள் வழங்கும் ஒத்துழைப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40