படைவீரர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை.!

Published By: Robert

21 Jul, 2016 | 08:57 AM
image

தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகவும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காகவும் உயிர்த்தியாகம் செய்த படை வீரர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் இராணுவ வீடமைப்பு வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை வழங்கினார். 

நேற்று கொழும்பு பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இவ்வாறு பணிப்புரை வழங்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி இக்கலந்துரையாடலில் பங்கேற்றதுடன் அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

முப்படைகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களையும் செயலூக்கமான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு அறிவுரை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், படைவீரர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் பற்றிக் கேட்டறிந்தார். 

பத்தரமுல்ல அகுரேகொடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராணுவத் தலைமையகத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. 

கரையோரப் பாதுகாப்புக்காக கடற்படையினரின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் சுற்றாடல் அமைச்சு, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் கடற்படை ஆகியன ஒன்றிணைந்து இதற்கான புதியதொரு செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் தேவைப்பாட்டை இதன் போது ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

தேசிய மாணவர் படையணியினை பலப்படுத்துதல் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன் சிறந்த மற்றும் ஒழுக்கவிழுமியம் நிறைந்த எதிர்கால சந்ததியினரை நாட்டில் உருவாக்குவதற்காக நாட்டின் அனைத்து கல்லூரிகள் மற்றும் மத்திய கல்லூரிகளில் மாணவர் படையணியினை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார். 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி ஆகியோரும் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி உள்ளிட்ட முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55