டுபாயில் 75 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

டுபாயில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மரினா மாவட்டத்தில் 75 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 35 ஆவது மாடியில் திடீரென தீப்பிடித்துள்ளது. பின்னர் குறித்த தீயானது மேல் மாடிகளுக்கும் பரவியது. 

இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக செய்தி வெளியாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு, உலகின் 127 ஆவது உயரமான கட்டிடம் ஆகும். துபாயின் 23 ஆவது உயரமான கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது.