நீதி அமைச்சின் பொது மக்கள் தினம் ஒன்லைன் முறையில்

Published By: Digital Desk 3

15 Oct, 2020 | 04:55 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் அச்சம் இருந்து வருகின்றதால் பொது மக்கள் தங்கள் தேவைகளுக்காக நீதி அமைச்சுக்கு வருகை தருவதில் சிரம் ஏற்பட்டுள்ளது.

அதனால் பொது மக்களின் சிரமம் மற்றும் தொற்று வரவுவதை தடுக்கும் நோக்கில் நீதி அமைச்சர் அலிசப்ரி தலைமையில் திங்கட்கிழமைகளில் இடம்பெறும் பொது மக்கள் தினத்தை ஒன்லைன் முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. 

அதன் பிரகாரம்  https://bit.ly/3lIBFgq  என்ற இணையத்தள (லின்க்) குறியீட்டுக்கு சென்று பதிவுசெய்துகொண்ட பின்னர், தங்களது முறைப்பாடு, தேவைகளை பதிவிடவேண்டும். நீதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான  www.moj.gov.lk என்ற முகவரிக்கு சென்று குறித்த இணையத்தள குறியீட்டுக்கு இலகுவாக பிரவேசிக்க முடியும்.

அத்துடன் திங்கட்கிழமை தினங்களில் இடம்பெறும் பொது மக்கள் தினத்தின்போது அமைச்சருக்கு சமர்ப்பிக்க இருக்கும் விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள்  சமர்ப்பிக்கவேண்டும் எனவும் நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37