இலங்கை பதினொருவர் அணிக்கெதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 162 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை பதினொருவர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை பதினொருவர் அணி   முதலாவது இன்னிங்ஸில் 229 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இதில் குணரத்ன 58 ஓட்டங்களையும், சிறிவர்தன 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்தவீச்சில் ஓ கீபி 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 474 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இதில் ஓ கீபி அட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும், பர்ன்ஸ் 72 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சீல் ஜயசூரிய 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இதேவேளை 243 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஆட்டத்தை அரம்பித்த இலங்கை பதினொருவர் அணி 83 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இதில் ஜயசூரிய மாத்திரம் 29 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்தவீச்சில்  ஓ கீபி 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.