போலாந்து கால்வாயில் வெடித்த 2 ஆம் உலகப் போர் கால குண்டு

Published By: Vishnu

15 Oct, 2020 | 01:25 PM
image

இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் வீசிய ஒரு பெரிய வெடிகுண்டு போலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் வெடிக்க வைத்து செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த குண்டானது 12,000 பவுண்டுகள் எடை கொண்டது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு போலந்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரியது. இது ஜேர்மன் கப்பலான லுட்ஸோவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந் நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை அகற்றுவதற்கான நடவடிக்கையை திங்களன்று போலாந்து படையினர் ஆரம்பத்தனர்.

இதற்காக குறித்த பகுதியிலிருந்து சுமார் 750 குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் வெடிகுண்டானது துறைமுக நகரமான ஸ்வினோஜ்ஸ்கிக்கு அருகிலுள்ள கால்வாயில் வெடிக்க வைத்து செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.

குண்டானது வெடித்தபோது கால்வாயில நீர் வானுயர சீறிப் பாய்ந்தது, எனினும் இதன் காரணமாக எந்தவொரு சேதங்களும் ஏற்படவில்லை என்று அந் நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாஜிக்கள் ஆக்கிரமித்த போலந்து இரண்டாம் உலகப் போர் முழுவதும் நேச நாட்டு விமானங்களில் இருந்து மீண்டும் மீண்டும் குண்டுவீச்சுக்களுக்கு முகங்கொடுத்தது.

இதனால் பல நகரங்கள் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08